90 கோடி வாக்காளர்கள்.. களை கட்ட போகும் லோக்சபா தேர்தல்
90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: வரப்போற தேர்தலில் கிட்டத்தட்ட 90 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட போகிறார்களாம்! இந்த தகவலை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
நாடே கடந்த 2 மாதமாக எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தது இந்த தேர்தல் தேதியைதான். தேதியை அறிவிக்காமல் ஏன் இவ்வளவு லேட்டு செய்கிறீர்கள் என்று காங்கிரஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்கவே ஆரம்பித்துவிட்டது. இப்போது, எம்பி தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக நடத்தப்படுவது நம் தமிழகத்தில்தான் என்றும் அறிவிப்புகள் வந்துள்ளன.

சுனில் அரோரா
எப்படி பார்த்தாலும் நாடு முழுவதும் மக்களவை தேர்தலில் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

4 மாநிலங்கள்
அப்போது மக்களவை தேர்தல் தேதியுடன், ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிஷா ஆகிய 4 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியையும் அறிவித்தார்.

புதிய வாக்காளர்கள்
இதில் 1.6 கோடி வாக்காளர்கள் 18-ல் இருந்து 19 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், கடந்த ஆண்டு 9 லட்சமாக இருந்த வாக்குச் சாவடிகள் இந்த முறை 10 லட்சமாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதாவது கிட்டத்தட்ட 8.4. கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முகம் தெரியும்
இந்த முறை தேர்தலில் ஸ்பெஷல் என்னவென்றால், யாருக்கு ஓட்டு போடுகிறோம் என்பதை தெரிந்துகொள்ள வாக்களிக்கும்போது வேட்பாளர்களின் முகம் தெரியுமாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications