காணோம்! காணோம்! கவுதம் கம்பீரை காணோம்!... டெல்லியை கலக்கும் சுவரொட்டிகள் #ShameOnGautamGambhir
டெல்லி: காற்று மாசு குறித்த நகர அபிவிருத்தி குழுவின் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் கிரிக்கெட் போட்டியை காண சென்றது சர்ச்சையாகி உள்ளது. மேலும் கவுதம் கம்பீரை காணவில்லை என்கிற சுவரொட்டிகளும் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
டெல்லியில் காற்று மாசு பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. இது தொடர்பாக இன்று காலை நகர அபிவிருத்தி குழுவின் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இக்கூட்டத்தில் டெல்லி கிழக்கு தொகுதி எம்.பி.யான கவுதம் கம்பீர் பங்கேற்கவில்லை.. அதே நேரத்தில் இந்தூரில் வங்கதேச அணியுடனான இந்திய கிரிக்கெட் அணி மோதும் போட்டியின் வர்ணனையாளராக பங்கேற்க கம்பீர் சென்றார்.
அத்துடன் அங்கே சகாக்களுடன் இனிப்பு சாப்பிட்டுக் கொண்டு ஜாலியாக இருக்கும் படங்களையும் ட்விட்டரில் வெளியிட்டார். இதனால் கடுப்பாகிப் போகினர் டெல்லிவாசிகள்.
பிறகென்ன சமூக வலைதளங்களில் #ShameOnGautamGambhir என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு அது டிரெண்டிங்கானது. அத்துடன் டெல்லியில் பல இடங்களில் கம்பீரை காணவில்லை என்கிற போஸ்டர்களும் ஒட்டப்பட்டன.
Delhi is choking and instead of attending the meeting on pollution being an honorable elected MP, it’s egregious dereliction Mr Gambir to skip it for this ? 😳#ShameOnGautamGambhir https://t.co/ed9a2lDc8o pic.twitter.com/xDk6sZa1sA
— Santosh Addagulla (@santoshspeed) 15 November 2019
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானதால் வேறுவழியே இல்லாமல் கம்பீர் விளக்கம் ஒன்றையும் கொடுத்திருக்கிறார். இருப்பினும் கடந்த வாரமே இந்த கூட்டம் குறித்து கம்பீருக்கு தெரிவிக்கப்பட்டும் அவர் பங்கேற்காதது ஏன் என்று ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications