வாலிபருக்கு 'பளார்' விட்ட இளம்பெண்... தீயாக பரவும் வீடியோ! டெல்லி மெட்ரோ ரெயிலில் என்ன நடந்தது?
புதுடெல்லி: டெல்லி மெட்ரோ ரெயிலில் இளம்பெண் ஒருவர் வாலிபரின் கண்ணத்தில் பளார்-பளார் என அறையும் வீடியோ காட்சி ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
உலகையே கைக்குள் அடக்கியுள்ள ஸ்மார்ட் போன்கள் மக்களின் பயன்பாடுக்கு வந்ததில் இருந்து, எங்கு எந்த சம்பவம் நடந்தாலும் சில நிமிடங்களில், ஏன் சில நொடிகளில் நம் கண் முன் வந்து விடுகிறது.
அப்படி டெல்லியில் நடக்கும் சம்பவம் ஒன்றுதான் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த ஒருவர் தான் அந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பளார் என அறைந்த இளம்பெண்
அந்த வீடியோவில், வாலிபர் ஒருவரும் இளம்பெண்ணும் தங்களுக்குள் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது தீடீரென அந்த இளம்பெண் வாலிபரை கண்ணத்தின் பளார் என அறை விடுகிறார். மேலும் திட்டிக்கொண்டே மீண்டும் மீண்டும் அறை விடுகிறார். ரெயில் பயணிகள் முன்னிலையில் அந்த பெண் கண்னத்தில் அடித்ததால் வாலிபர் டென்சன் ஆகிவிடுகிறார்.

கடுப்பான வாலிபர்
இதனால் கடுப்பான அந்த வாலிபர் மீண்டும் தன்னை அடிக்க முயன்ற இளம்பெண்ணை கண்ணத்தில் அறைகிறார். இதனால் அந்த பெண்ணும் கோபமடைந்து வாலிபருக்கு மேலும் அறை விடுகிறார். இவ்வாறாக 2 பேரும் மாறி அடித்துக்கொள்கின்றனர். ஒரு கட்டத்தில் ரெயில்வே நிலையத்தில் ரயில் நின்றதும் 2 பேரும் ஒன்றாக இறங்கி செல்கின்றனர். இவ்வாறான காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியிருக்கிறது. எனினும் அங்கிருந்த மற்ற பயணிகள் இந்த சம்பவத்தை கண்டுகொள்ளவில்லை.

டிரெண்ட் ஆக வேண்டும் என்பதற்காக
அந்த பயணி வெளியிட்ட வீடியோவை தற்போது வரை பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும் வீடியோவுக்கு தங்களது கருத்துக்களையும் அள்ளி வீசி வருகின்றனர். அந்த வகையில் நெட்டிசன் ஒருவர், 'இந்த சண்டை ஒரு 'ஸ்கிரிப்ட்' ஆக கூட இருக்கலாம்' என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஒருவர், 'வேண்டுமென்றே ஒரு கதையை தயார் டிரெண்ட் ஆக வேண்டும் என்பதற்காக இது போன்று செய்கிறார்கள்' என பதிவிட்டுள்ளார்.

எதற்காக இந்த சண்டை?
மிகப்பெரிய அளவில் டிரெண்ட் ஆகியுள்ள இந்த வீடியோவில் எதற்காக இருவரும் இப்படி மாறி மாறி அடித்துக்கொண்டர் என்றால், சாதாரண விஷயம் தான் என அங்கிருந்த பயணிகள் தெரிவிக்கின்றனர். அதாவது, இளம்பெண் வைத்திருந்த ஒரு டி-சர்ட் விலையானது 1,000 ரூபாய் என தெரிகிறது. ஆனால் அந்த டி-சர்டின் மதிப்பு வெறும் 150 ரூபாய் தான் என கூறுகிறார். இதனால் தான் அந்த பெண் திடீரென பத்திரகாளியாக மாறியிருக்கிறார் என்று தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications