வருமான வரித்துறை அலுவலகத்தில் பயங்கர தீ.. அலறிய ஊழியர்களால் பரபரப்பான டெல்லி.. ஆவணங்கள் எரிந்ததா?
டெல்லி: டெல்லியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் திடீரென்று ஏற்பட்ட தீவிபத்தால் ஊழியர்கள் ஜன்னல் வழியாக வெளியே குதிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அலுவலகத்தில் பற்றி எரிந்த தீயை 21 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் போராடி அணைத்தனர்.
டெல்லி ஐடிஓ பகுதியில் பழைய போலீஸ் குடியிருப்புக்கு எதிரே வருமான வரித்துறை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் வருமான வரித்துறையின் வெவ்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தான் இன்று பிற்பகல் 3 மணியளவில் திடீரென்று வருமான வரித்துறை அலுவலகம் இயங்கும் 3வது தளம் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர். சிலர் ஜன்னல் வழியாக வெளியேற முயன்றனர்.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் அலுவலகத்தில் சிக்கியவர்களை மீட்டனர். மேலும் 21 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து வருமான வரி அலுவலகத்தில் பிடித்த தீயை அணைக்கும் பணியை தொடங்கினர். தீயின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அணைப்பதில் சிக்கல் நிலவியது.
இருப்பினும் நீண்டநேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து அலுவலகத்தில் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். ஆனாலும் இந்த தீவிபத்தில் ஒருவர் காயமடைந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் 7 பேர் அலுவலகத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டனர்.
தற்போதைய சூழலில் வருமான வரி அலுவலகத்தில் தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இருப்பினும் ஏதேனும் மின்சாதனத்தில் ஏற்பட்ட மின்கசிவால் இந்த தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதேபோல் தீவிபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்ததா? என்பது பற்றிய விபரம் தெரியவில்லை.
இதுபற்றி டெல்லி தீயணைப்பு துறையின் தலைவர் அதுல் கார்க் கூறுகையில், ‛‛வருமான வரித்துறை அலுவலகத்தின் 3வது மாடியில் தீவிபத்து ஏற்பட்டது. அதில் சிக்கிய 5 ஆண்கள், 2 பெண்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்'' என்றார். இதுபற்றி தீயணைப்பு துறை மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications