வானில் பறந்தபோது வந்த பிரச்சனை.. நடுரோட்டில் ஹெலிகாப்டரை லேண்ட் செய்த பைலட்.. திக் திக் சம்பவம்!

Subscribe to Oneindia Tamil

உத்தராகண்ட்: கேதர்நாத் சென்ற ஹெலிகாப்டரில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அவசர அவசரமாக சாலையில் தரையிறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹெலிகாப்டரின் வால் பகுதி மோதியதால் சாலையில் நின்றிருந்த கார் சேதமானது. இந்த விபத்தில் விமானிக்கு மட்டும் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது.

கேதார்நாத் யாத்திரை என்பது இந்து மதத்தின் மிக முக்கியமான யாத்திரைகளில் ஒன்றாகும். கேதார்நாத் மட்டுமல்லாமல் பத்ரிநாத், கங்கோத்ரி மற்ரும் யமுனோத்ரி ஆகிய 4 புனித தலங்களுக்கு செல்வதை சார் தாம் யாத்திரை என்று சொல்வார்கள். 4 புனித தலங்களுக்கு 4 தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. கேதார்நாத்தில் சிவன், பத்ரிநாத்தில் விஷ்ணு, கங்கோத்ரியில் கங்கை, யமுனோத்ரியில் யமுனா தேவியை வழிபடலாம்.

A helicopter en route to Kedarnath made an emergency landing on a road which shocks people

கேதர்நாத் யாத்திரை

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கானோர் இந்த புனித யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர். நடப்பாண்டில் கேதார்நாத் யாத்திரை ஏப்ரல் மாதம் கடைசியில் தொடங்கியது. இந்த யாத்திரையை வயதானவர்களும், மாற்றுத்திறனாளிகளும் மேற்கொள்வதற்காக ஹெலிகாப்டர் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலமாக எளிதாக பயணித்து யாத்திரை மேற்கொண்டு தெய்வங்களை பொதுமக்கள் வழிபட்டு வந்தனர்.

ஹெலிகாப்டர் சேவை

சுற்றுலா துறை தரப்பில் அரசு மற்றும் தனியார் மூலமாக ஹெலிகாப்டர் சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கிரெஸ்டல் ஏவியஷன் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் ஹெலிகாப்டரில் 5 சுற்றுலா பயணிகள் கோவிலுக்கு புறப்பட்டுள்ளனர். இந்த ஹெலிகாப்டரை ஆர்பிஎஸ் ஜோஷி என்பவர் இயக்கி இருக்கிறார்.

சாலையில் லேண்டான ஹெலிகாப்டர்

ஹெலிகாப்டர் டேக் ஆஃபாகி உயரத்திற்கு சென்ற போது, ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதன்பின் விபத்தில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காக விமானி அவசர அவசரமாக வாகனங்கள் வராத சாலையை பார்த்து தரையிறக்கி இருக்கிறார். தரையிறக்கிய போது சாலையில் பார்க் செய்யப்பட்டிருந்த கார் மீது ஹெலிகாப்டரின் வால் பகுதி உரசி சேதமடைந்தது.

விமானிக்கு காயம்

இதில் ஹெலிகாப்டரின் வால் பகுதியும் சேதமடைந்து, காரும் சேதத்தை சந்தித்தது. அதேபோல் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர். விமானிக்கு மட்டும் முதுகில் காயம் ஏற்பட்டதால், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். திடீரென சாலையில் ஹெலிகாப்டர் பார்க் செய்யப்பட்டது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ட்ரெண்டான வீடியோ

இதன்பின் உடனடியாக ஹெலிகாப்டர் மற்றும் உள்ளூர் நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நிர்வாகிகள் உடனடியாக ஹெலிகாப்டரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இருந்தாலும் சாலையில் திடீரென ஹெலிகாப்டர் இறங்கிய வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+