3, 6-ம் வகுப்பு பாடப் புத்தகங்களில் இருந்து அரசியல் சாசனத்தின் முகப்புரையை 'நீக்கிய' என்சிஇஆர்டி!
டெல்லி: தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) மற்றொரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. என்சிஇஆர்டி-ன் 3-வது மற்றும் 6-வது பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்த நாட்டின் அரசியல் சாசனத்தின் முகப்புரையை நீக்கிவிட்டிருப்பதுதான் புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது. ஏற்கனவே பாபர் மசூதி, குஜராத் வன்முறை, மகாபாரதம், வேதங்கள் என என்சிஆர்டி சர்ச்சைகளில் சிக்கி இருந்தது.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) தயாரிக்கும் பள்ளிப் பாடப் புத்தகங்கள் தொடர்ந்து சர்ச்சையாகி வருகின்றன. இந்த கவுன்சில்தான் இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றம் செய்ய பரிந்துரைத்தது. உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியில் இருந்த பாபர் மசூதியை இந்துத்துவா அமைப்பினர் இடித்தது தொடர்பான பகுதிகளையும் நீக்கியது. குஜராத் வன்முறைகள் தொடர்பான குறிப்புகளையும் நீக்கி இருந்தது. அத்துடன் மகாபாரதம், வேதங்களை புதிய பாடப் புத்தகங்களில் சேர்த்ததும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) தான். இதனால்தான் மாணவர்களின் கல்வி அறிவையே முடக்கப் பார்க்கிறது இந்த நிறுவனம் என்கிற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

தற்போது நாட்டின் அரசியல் சானத்தின் மீதும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) கை வைத்திருக்கிறது. 3, 6-ம் வகுப்பு பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்த அர்சியல் சாசனத்தின் முகப்புரையை அதிரடியாக நீக்கி இருக்கிறது என்சிஇஆர்டி.
2020-ம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் 6-ம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகத்தி அரசியல் சாசனத்தின் முகப்புரை இடம் பெற்றுள்ளது. ஆனால் சமூக அறிவியல் புத்தகத்தில் அரசியல் சாசனத்தின் முகப்புரை இடம் பெறவில்லை. அதேநேரத்தில் குடிமக்களின் அடிப்படை உரிமைகள், அடிப்படை கடமைகள் ஆகியவற்றை இந்த சமூக அறிவியல் பாடம் விவரிக்கிறது. அரசியல் சானத்தின் முகப்புரையே இல்லாமல் அரசியல் சாசனத்தில் இடம் பெற்றுள்ள அடிப்படை உரிமைகள், கடமைகள் பற்றி பேசுகிறது 6-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகம். இது எப்படி சரியானதாக இருக்க முடியும் என்கின்றனர் கல்வியாளர்கள்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications