திருப்பதி லட்டு: ஒடிஷா, ஹரியானா.. வடக்கே தேர்தல் நடந்தால் தமிழகம் மீது பழி போடுவதும் 'வியூகமா'?
டெல்லி: வட இந்திய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் போது 'இந்துக்களின்' வாக்குகளை 'ஒருங்கிணைக்க' தமிழகத்தின் மீது பழியைப் போட்டுவிடுவது அண்மைக்காலமாக 'தேர்தல் வியூகமாக'வே உருவெடுத்திருக்கிறது. ஒடிஷா தேர்தலின் போது பூரி ஜெகநாதர் கோவில் கருவூல சாவிகள் தமிழகத்தில் பதுக்கப்பட்டுள்ளதாக பிரசாரம் செய்யப்பட்டது; தற்போது ஹரியானா தேர்தல் நடைபெறும் நிலையில் ஆந்திரா திருப்பதி கோவில் லட்டுவில் தமிழகத்தைச் சேர்ந்த நிறுவனம் மாட்டு கொழுப்பை கலந்துவிட்டதாக கிளப்பிவிடப்பட்டிருக்கிறது என்பதை முன்வைத்து அரசியல் பார்வையாளர்கள் இந்த கேள்வியை எழுப்புகின்றனர்.
சட்டசபை, லோக்சபா தேர்தல்களில் வெல்வதுதான் அனைத்து அரசியல் கட்சிகளின் உத்தி. அதற்காக ஒரு அறத்துக்குட்பட்ட வழிகளைக் கையாள்கிற, வியூகம் வகுக்கிற போக்குகள் எதுவும் ஜனநாயகத்தில் இல்லாமலேயே போய்விட்டது. அதிகார போதையை ருசிப்பதற்காக அறமற்ற, ஈவிரக்கமற்ற, உயிர்களைக் குடித்தேனும் வாக்குகளை ஒருங்கிணைக்கிற பேராபத்தான நச்சு சக்திகள் தலையெடுத்துவிட்டதால்தான் இத்தகைய ஜனநாயகப் பேரவலங்கள் தொடருகின்றன.

இதன் புதிய யுக்தியாக, வட இந்தியாவில் தேர்தல் பிரசாரம் செய்யும் போது எல்லாம், தமிழ்நாட்டையும் தென்னிந்தியாவையும் வட இந்தியர்களுக்கு எதிராக குறிப்பாக இந்துக்களுக்கு எதிராக மடைமாற்றுகிற போக்கு தொடருகிறது. லோக்சபா தேர்தல் பிரசாரத்த்தின் போது, சனாதனத்தை அழிக்க தென்னகம் பார்க்கிறது; சனாதனத்தை பின்பற்றுவோரை அழிக்கப் பார்க்கிறார்கள் தமிழர்கள் என பிரசாரம் செய்த அட்டூழியத்தை காதுபட கேட்டோம். அதுவும் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழர்களை ஆஹோ ஓஹோவென புகழ்ந்து பேசிவிட்டுப் போன உடனேயே இந்த அக்கிரமப் பேச்சுகள் அரங்கேறின.
இதன் உச்சமாக ஒடிஷாவில் லோக்சபா, சட்டசபை தேர்தல் இணைந்து நடத்தப்பட்ட போது, பூரி ஜெகநாதர் கோவில் கருவூல சாவியை தமிழ்நாட்டுக்கு கொண்டு போய் பதுக்கிவிட்டார்கள் என தமிழர்களுக்கு திருட்டுப் பட்டம் கட்டினார்கள். அத்துடன் நிற்கவில்லை.. ஒடிஷா மக்களே! தமிழரான விகே பாண்டியனா உங்களை ஆட்சி செய்ய அனுமதிப்பது என பிரசாரம் செய்தனர். இத்தகைய விஷமப் பிரசாரமே தேர்தலில் அத்தகைய அநீதியாளர்களுக்கு அமோக அறுவடையைக் கொடுத்தது என்பதுதான் யதார்த்தம்.
தற்போது ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானாவில் தேர்தல் நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீர் கள நிலவரம் வேறு. ஹரியானாவின் கள நிலவரம் வேறு. ஹரியானாவில் தோல்வியை தழுவிக் கொண்டிருக்கும் அரசியல் சக்திகள், எப்படியாவது இந்துக்களின் வாக்குகளை ஒருங்கிணைக்க முடியாதா என போராடிக் கோண்டிருக்கின்றன. இத்தகைய தருணத்தில்தான் மீண்டும் தமிழ்நாடு மீதும் தென்னிந்தியா மீதும் பழி போடுகிறார்கள். திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பை கலந்துவிட்டார்கள்; அதுவும் தமிழ்நாட்டு நிறுவனம் அனுப்பிய நெய்யில்தான் மாட்டு கொழுப்பு கலக்கப்பட்டுவிட்டது என பரப்பிவிட்டிருக்கிறார்கள். பசுமாட்டின் சிறுநீர் புனிதமானது; பசுமாட்டின் கழிவான சாணம் புனிதமானது; பசுமாட்டின் ரத்தமான பால் புனிதமானது; பசுமாட்டின் பாலில் இருந்து பெறப்படும் தயிர் புனிதமானது என பேசுகிற சக்திகளே, அய்யய்யோ பசுமாட்டின் கொழுப்பையும் கலந்து விட்டார்களே என வயிற்றில் அடிக்கிறார்கள்.. அவர்களுக்கே தெரியும்... ஹரியானா தேர்தல் முடியும் வரை இந்த ஒப்பாரி நீடிக்கட்டும் என்பது! ஏன் இப்படியான ஒரு அரசியல் பிழைப்பு? அப்படி என்னதான் அதிகாரத்தின் போதை வெறியோ?
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications