டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா தடுப்பூசி 2021க்கு முன் சாத்தியமில்லையா? கருத்தில் பின்வாங்கிய மத்திய அமைச்சகம்

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் பத்திரிக்கை தகவல் பணியக வளைதள பக்கத்தில் ( Press Information Bureau website). வெளியிடப்பட்ட தகவலை அதிரடியாக திருத்தி உள்ளது.

"2021 க்கு முன்னர் கோவிட் -19 தடுப்பூசி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தயாராக இருக்க வாய்ப்பில்லை" என்று வெளியிட்ட தகவலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் நீக்கி உள்ளது.

a vaccine is unlikely to be ready for mass use before 2021 The Ministry of Science remove statement

டாக்டர் டி.வி.வெங்கடேஸ்வரன் எழுதிய 'கொரோனா வைரஸ் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உலகளாவிய போட்டியில் இந்தியாவின் தடுப்பூசி பரிசோதனைகள் குறித்த அறிக்கையை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் பத்திரிக்கை தகவல் பணியக பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

அதில் இரண்டு இந்திய தடுப்பூசிகளான கோவாக்சின் மற்றும் ஜைகோவ்-டி உள்பட போட்டியில் உள்ள உலகின் 140 தடுப்பூசிகளில் 11 உலகெங்கிலும் உள்ள மனித சோதனைகளில் நுழைந்துள்ளன., எனினும் இந்தியாவின் இரண்டு தடுப்பூசிகளும் 2021ம் ஆண்டிற்கு முனபு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தயாராக இருக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டிருந்தது.

நல்ல செய்தி.. தென்கொரியாவில் இருந்து தமிழகம் வந்தது ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள்!நல்ல செய்தி.. தென்கொரியாவில் இருந்து தமிழகம் வந்தது ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள்!

Recommended Video

    August 15 கொரோனாவுக்கான தடுப்பூசியை அறிமுகம் செய்ய ICMR திட்டம்

    இந்த தகவலால் சர்ச்சை எழுந்தது. ஏனெனில் முன்னதாக ஐசிஎம்ஆர் வரும் ஆகஸ்ட் 15ம்தேதி தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்றும் நம்பிக்கை அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதனால் இரு வேறு கருத்துக்களால் குழப்பமும் சர்ச்சையும் ஏற்பட்டது. இதையடுத்து இணைதளத்தில் அறிக்கை நீக்கப்பட்டு, திருத்தப்பட்ட அறிக்கை வெளியடப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட அறிக்கையில் 2021 க்கு முன்னர் கோவிட் -19 தடுப்பூசி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தயாராக இருக்க வாய்ப்பில்லை என்ற பத்தி குறிப்பிடப்படவில்லை.

    English summary
    The Ministry of Science and Technology to remove its statement that "a vaccine is unlikely to be ready for mass use before 2021"
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X