என்னங்க இது.. டெல்லியில் நடுரோட்டில் இப்படி எல்லாம் கூட நடக்குமா.. வைரலாகும் வீடியோ காட்சிகள்!
டெல்லி: டெல்லியில் நடுரோட்டில் நடந்த சம்பவம் ஒன்று இணையம் முழுக்க மக்கள் மத்தியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் சமீப காலமாக பைக் ஸ்னாட்ச்சிங் அதிகரித்துள்ளது. பைக்கில் வந்து மொபைல், செயின் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி செல்வது வழக்கம் ஆகி உள்ளது.
பைக்கில் மெதுவாக வருவது போல வந்து, சாலையில் நடப்பவரின் அருகில் வந்து போனை பிடுங்கிவிட்டு வேகமாக பைக்கை ஓட்டி செல்லும் கும்பலின் அட்டூழியம் அதிகரித்துள்ளது.

கும்பல்
சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் பைக் ஸ்னாட்சிங் அதிகரித்துள்ளது. அதிலும் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களின் தங்க நகைகளை இந்த கும்பல் குறி வைத்து திருடுவதும் வழக்கம் ஆகி உள்ளது. இப்படி ஒரு சம்பவம்தான் தலைநகர் டெல்லியில் நடைபெற்று உள்ளது.

டெல்லி
டெல்லியில் மக்கள் அதிகம் நடமாடும் ஷாலிமார் பாக் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பைக்கில் வந்த நபர் ஒருவர் அந்த சாலையில் சென்ற பெண்ணின் தங்க சங்கிலியை இழுத்து அறுத்து திருடி உள்ளார். இதில் சோகம் என்னவென்றால் அந்த பெண்மணி சுமார் 150 மிமீ தரதரவென இழுத்து செல்லப்பட்டுள்ளார்.

மக்கள்
மக்கள் பலர் அங்கேயே இருந்தும் கூட யாராலும் அந்த பைக்கில் வந்த திருடனை தடுக்க முடியவில்லை. சம்பவ இடத்திலேயே தரதரவென இழுக்கப்பட்ட அந்த பெண் காயங்களுடன் அங்கேயே கதறி அழுதார். இதையடுத்து அருகில் இருந்த மக்கள் வந்து அவரை எழுப்பிவிட்டனர்.
போலீஸ்
இந்த வீடியோ தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகிறார்கள். தலைநகர் டெல்லியில் பிஸியான இடத்தில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அபிஜீத் வீட்டில் திடீர் போலீஸ் படை.. போராட்டத்திற்கு சென்ற அடுத்த நொடி! அபிஜீத் பெற்றோர் எங்கே? -
கரப்பான் பூச்சிகளின் எபெக்ட்: நிரம்பி வழியும் போலீஸ்.. மோடி, அமித்ஷா வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு -
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
இளைஞர்கள் இனி பயப்பட மாட்டார்கள்.. மத்திய அரசை விளாசிய ஆப்ஜித் தீப்கே! டெல்லி ஜந்தர் மந்தரில் ஆவேசம் -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
தேசியக்கொடியை கொண்டு வாங்க! டெல்லியில் லேண்ட் ஆனதும் ஆப்ஜித் தீப்கே பதிவு.. பரபரப்பில் ஜந்தர் மந்தர் -
ஆம் ஆத்மி கட்சியில் 3 ஆண்டுகள் பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்! யார் இந்த ஆப்ஜித் தீப்கே? -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications