120 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த ரகசிய அறையை திறந்த பெண்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்
டெல்லி: மிகவும் பழமையான வீடு ஒன்றை வாங்கியுள்ள பெண் ஒருவர் அந்த வீட்டில் 120 ஆண்டுகளாக திறக்கப்படாத ரகசிய அறை ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்த் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, நாசர் என நட்சத்திரங்கள் பலர் நடித்து வெளியாகி வசூலை வாரிக் குவித்தது சந்திரமுகி திரைப்படம். இந்த அரண்மனையோட ஹிஸ்டரி தெரியுமா முருகேசா என்று ரஜினி கேட்பதுபோல பழமையான வீடுகள் என்றாலே அதற்கென ஒரு தனி கதையும், வரலாறும், கூடவே ஒரு அமானுஷ்ய கதையும் கட்டாயமாக இருக்கும்.

வேட்டையனின் அரண்மனையில் உள்ள அறையில் சந்திரமுகி பயன்படுத்திய நகைகள், நடனத்துக்குப் பயன்படுத்திய சலங்கைகள் போன்றவை இருப்பதும், அந்த நகைகளை ஜோதிகா எடுத்து அணிந்துகொண்டு சந்திரமுகியாக மாறும் காட்சிகளும் அதிபயங்கரமாக இருக்கும். பழமையான வீடுகள், அரண்மனைகள் என்றாலே அதில் பல பொக்கிஷங்களும், அமானுஷ்யங்களும் நிறைந்தது என்றே நாம் இதுவரை கதைகளில் கேட்டிருப்போம்.
அந்த வகையில், வெளிநாட்டைச் சேர்ந்த ஃபேன்டசி நாவல் எழுதும் பெண்ணான நிக்கோலே கிளேர் என்பவர் பழமையான வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த வீட்டில் 120 ஆண்டுகளாக திறக்கப்படாத ரகசிய அறை ஒன்றை அவர் கண்டுபிடித்துள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பழமையான வீட்டில் 120 ஆண்டுகளாக திறக்கப்படாத ரகசிய அறை ஒன்றை அந்தப் பெண் கண்டுபிடித்துள்ளார். இதையடுத்து, அந்த அறையைத் திறப்பதை வீடியோவாக படம் பிடித்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நிக்கோலே கிளேர் என்ற அந்தப் பெண் "இந்த வீட்டில் 120 ஆண்டுகளாக திறக்கப்படாத ரகசிய அறை ஒன்று இருக்கிறது. அதை நான் உங்களுக்காக திறக்கிறேன்" என்று வீடியோவில் காட்டுகிறார்.
அந்த வீட்டுக்குள் பாழடைந்த ரகசிய அறையின் படிக்கட்டுகள் தெரிகிறது. சில பழமையான சோபாக்கள் தூசிபடிந்து அங்குள்ளன. குறுகிய அறைக்குள் ஏராளமான புத்தகங்கள் அங்குள்ள அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. அதன் அருகே சோபாக்களும் உள்ளது. பார்ப்பதற்கே ஆச்சரிய வைக்கப்படும் அளவுக்கு ஏராளமான புத்தகங்கள் வைப்பதற்கென்ற அந்த அறை கட்டப்பட்டுள்ளது போன்ற தோற்றத்தை அந்த வீடியோ ஏற்படுத்துகிறது.
அதில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்டாக அப்பெண், ரகசிய அறை திறக்கப்படுவது உண்மை என்றும், புத்தக அறையாக காட்டப்படுவது எனது கற்பனை என்றும் தெரிவித்துள்ளார். இருந்தாலும் அப்படியொரு நூலகம் இருக்க வேண்டும் என்பது என் கனவு என்று அந்த பெண்மணி பதிவு வெளியிட்டுள்ளார்.
பொதுவாக ரகசிய அறை என்றாலே பொக்கிஷங்கள், சொத்துகள் போன்றவை இருக்கும் என்றே பலரும் கருதும் நிலையில் புத்தகங்களை பொக்கிஷங்களாக நினைக்கும் உங்களுடைய கனவு பெரும் பாராட்டுக்குரியது என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். நிக்கோலே கிளேரின் இந்தப் பதிவை 97 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பொதுமக்களின் பாராட்டைப் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications