தமிழகத்தில் S.I.R.. ஆதார் அட்டை குடியுரிமைக்கான ஆதாரம் கிடையாது! - தலைமை தேர்தல் அதிகாரி கறார்
டெல்லி: பீகார் மேற்கொள்ளப்பட்டதை போல தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்களில் நாளை முதல் வாக்காகளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்(SIR) மேற்கொள்ளப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இது குறித்த அறிவிப்பை வெளியிட்ட தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், ஆதார் அட்டையை குடியுரிமைக்கான ஆவணமாக ஏற்க முடியாது என்று கட் அண்ட் ரைட்டாக தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், "ஆதார் அட்டையைப் பொறுத்தவரை, ஆதார் சட்டத்தின்படி ஆதார் பயன்படுத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆதார் சட்டத்தின் பிரிவு 9ன் படி, இருப்பிடம் அல்லது குடியுரிமைக்கான சான்றாக ஆதார் அட்டையை பயன்படுத்த முடியாது என்று கூறுகிறது. ஆதார் பிறந்த தேதிக்கான சான்றாக கூட கணக்கில் கொள்ள முடியாது. உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் இதை குறிப்பிட்டிருக்கிறது.

இதைக் கருத்தில் கொண்டு, ஆதார் ஆணையம் அதன் அறிவிப்பை வெளியிட்டது. இன்றும் கூட, நீங்கள் ஒரு புதிய ஆதாரை டவுன்லோடு செய்தால், அதில் பிறந்த தேதி அல்லது இருப்பிடம் அல்லது குடியுரிமைக்கான சான்றாக இல்லை என்று அட்டையில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆதார் அட்டை அடையாளச் சான்றாகும். அதை மின்னணு கையொப்பத்திற்கும் பயன்படுத்தலாம்" என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஆவணப் பட்டியலில், மத்திய/மாநில அரசு ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்களின் அடையாள அட்டை/ஓய்வூதியக் கட்டளை, 1987 ஜூலை 1க்கு முன் அரசு/உள்ளூர் அதிகாரிகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டை/சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட், பத்தாம் வகுப்பு/கல்விச் சான்றிதழ், நிரந்தர வசிப்பிடச் சான்றிதழ், வன உரிமைச் சான்றிதழ், ஓபிசி/எஸ்சி/எஸ்டி சான்றிதழ்கள், தேசிய குடிமக்கள் பதிவேடு (கிடைக்கும் இடங்களில்), குடும்பப் பதிவேடு, நிலம்/வீடு ஒதுக்கீட்டுச் சான்றிதழ் போன்ற 11 ஆவணங்கள் அடங்கும்.
கூடுதலாக, ஆதார் அடையாளச் சான்றாக பயன்படுத்தப்படலாம். ஆயினும், ஆதார் அட்டை பிறப்பு தேதி, இருப்பிடம் அல்லது குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல. இது தொடர்பான தேர்தல் ஆணையத்தின் 09.09.2025 தேதியிட்ட கடித வழிகாட்டுதல்கள் பொருந்தும்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, குஜராத் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படும். முதல்கட்டமாக பீகாரில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நாளை முதல் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், சேர்ப்பு ஆகியவை இன்று நள்ளிரவு முதல் நிறுத்தப்படும். சிறப்புத் தீவிர திருத்தப் பணியின் இரண்டாம் கட்டத்திற்கான வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான பயிற்சி நாளை முதல் தொடங்கும்.
வீடு வீடாக சென்று வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணிகள் நவ.4ம் தேதி முதல் டிச.4ம் தேதி வரை நடைபெறும். இந்த பணிகள் முடிந்து டிச.9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வரைவு வாக்காளர் பட்டியலில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் டிச.9 முதல் ஜன.8 வரை தெரிவிக்கலாம். ஆட்சேபனை தொடர்பான சரிபார்ப்புகள் டிச.9 முதல் ஜன.31 வரை மேற்கொள்ளப்படும். இந்த பணிகள் எல்லாம் முடிந்து பிப்.7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்" என்று கூறியிருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications