அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
டெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்தே கொல்ல முயற்சி நடப்பதாக பரபரப்பான புகார் கிளம்பி உள்ளது. சர்க்கரை நோய் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சூலின் வழங்க சிறை நிர்வாகம் மறுப்பதாக பரபரப்பான குற்றச்சாட்டை ஆம்ஆத்மி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.
ஊழலுக்கு எதிராக தொடங்கிய ஆம்ஆத்மி கட்சியே தற்போது பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது. அதாவது ஊழலுக்கு எதிராக போராடிய அன்னா ஹசாரேவுடன் செயல்பட்ட அரவிந்த் கெஜ்ரிவால் தனியே ஆம்ஆத்மி எனும் கட்சியை தொடங்கி டெல்லி முதல்வரானார்.

டெல்லியில் கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதில் ஊழல், முறைகேடு புகார் எழுந்த நிலையில் அது கைவிடப்பட்டது. இருப்பினும் அதுபற்றிய புகார் பற்றி சிபிஐ விசாரணையை தொடங்கியது. அப்போது சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அமலாக்கத்துறையும் விசாரணைக்குள் குதித்தது.
இதையடுத்து ஆம்ஆத்மி தலைவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். முதலில் டெல்லி தணை முதல்வராகவும், கலால்துறை அமைச்சராகவும் இருந்த மணிஷ் சிசோடியா, அதன்பிறகு ஆம்ஆத்மி எம்பி சஞ்சய் சிங் கைது செய்யப்பட்டனர். தற்போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் ஜாமீன் கோரிய நிலையில் இன்னும் கிடைக்கவில்லை. இதனால் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் தான் சிறையில் வைத்தே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்ல சதித்திட்டம் நடப்பதாக ஆம்ஆத்மி பகீர் புகாரை முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி மர்லினா சிங் கூறியதாவது: ‛‛சிறையில் வைத்தே அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்ய முயற்சி எடுக்கப்படுகிறது. கெஜ்ரிவாலின் Blood sugar அளவு கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் திகார் ஜெயில் நிர்வாகம் கெஜ்ரிவாலுக்கு இன்சூலின் வழங்கவில்லை. அவர் கேட்டும் கூட ஜெயில் நிர்வாகம் இன்சூலின் வழங்கவில்லை.
இது எந்த வகையான சதித்திட்டம் என தெரியவில்லை. பாஜகவால் வீழ்த்த முடியாத நபராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இன்று அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்தே கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சர்க்கரை நோய் உள்ளது. 30 ஆண்டுகளாக அவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. அவர் தினமும் 54 யூனிட் இன்சூலின் எடுத்து கொள்வார்.
கெஜ்ரிவால் சர்க்கரை நோயாளி என்பது அறிந்தே வீட்டில் இருந்து உணவு வழங்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் பாஜக தனது துணை அமைப்பான அமலாக்கத்துறை மூலம் சிறையில் வைத்தே அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நலனை மோசமாக்க திட்டமிட்டுள்ளது '' என குற்றம் சுமர்த்தினார்.
முன்னதாக இன்று அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது குற்றச்சாட்டை முன்வைத்தது. அதாவது அரவிந்த் கெஜ்ரிவால் தனது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பதற்கான தினமும் மாம்பழம், ஆலு பூரி, இனிப்புகளை உட்கொள்கிறார் என தெரிவித்தது. அமலாக்கத்துறை இப்படி கூறியதை தொடர்ந்து தான் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையிலேயே கொல்ல முயற்சி நடப்பதாக டெல்லி ஆம்ஆத்மி அமைச்சர் அதிஷி மர்லினா சிங் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இருப்பினும் இந்த குற்றச்சாட்டை முன்வைத்த அதிஷி மர்லினா சிங்கிடம் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூறியது பற்றிய கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அதிஷி மர்லினா சிங், ‛‛அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் பலமுறை பொய் கூறியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால் இனிப்புகளை சாப்பிடுவதாகவும் இப்போது பொய்யை தெரிவித்துள்ளது. மேலும் சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம், சாக்லேட்டுகளை கையிலேயே வைத்திருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். ஏனெ்னறால் சர்க்கரை நோயாளிகளுக்கு திடீரென்று சர்க்கரை அளவு குறையவும் வாய்ப்புள்ளது. இது பாஜக மற்றும் அமலாக்கத்துறைக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை'' என தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications