பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அரசு கவிழும் அபாயம்? காங்கிரஸ் கட்சிக்கு தாவும் 32 எம்.எல்.ஏக்கள்?
டெல்லி: பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு கவிழும் அபாயத்தில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் 32 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸுக்கு தாவ இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து சில எம்.எல்.ஏக்கள் பாஜக பக்கம் தாவக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
பஞ்சாப் சட்டசபையில் ஆம் ஆத்மி கட்சிக்கு 93 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சிக்கு 16 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர். இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் 32 எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் பக்கம் தாவ இருக்கின்றனர் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரதாப் பஜ்வா வெளியிட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

117 எம்.எல்.ஏக்களை கொண்ட பஞ்சாப் சட்டசபையில் ஆம் ஆத்மி கட்சி தனிப்பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களைக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கூறுவதைப் போல 32 எம்.எல்.ஏக்கள் கட்சி தாவினாலும் கூட தற்போதைய நிலையில் ஆம் ஆத்மி அரசு கவிழாது என்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள்.
அத்துடன் காங்கிரஸ் கட்சி கடந்த பல மாதங்களாக இப்படியான பொய் பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது; ஆனால் ஆம் ஆத்மியில் இருந்து ஒரு எம்.எல்.ஏ. கூட இதுவரை விலகவில்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் அக்கட்சி நிர்வாகிகள்.
ஆம் ஆத்மி கட்சியைப் பொறுத்தவரையில் முதலில் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியது. பின்னர் பஞ்சாப்பில் அதிகாரத்துக்கு வந்தது. ஹரியானா, குஜராத் மாநிலங்களிலும் ஆம் ஆத்மி கால் பதிக்க போராடுகிறது. இந்த நிலையில் டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்தே பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசுக்கும் நெருக்கடி உருவாகிக் கொண்டிருப்பதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications