டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அபிநந்தன் என்றால் வெல்கம் என அர்த்தம்.. இனி அது மாறும்... பிரதமர் மோடி புகழாரம்

Google Oneindia Tamil News

டெல்லி: அபிநந்தன் என்றால் வெல்கம் என அர்த்தம் என்றும் இனி அது மாறும் என்றும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் நேற்று விடுதலை செய்யப்பட்டார். லாகூருக்கு அழைத்து வரப்பட்டு, பின்னர் சாலை மார்க்கமாக வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

விமானப் படையின் உயரதிகாரிகளான ஏர் வைஸ் மார்ஷல்கள் பிரபாகரன், ரவி கபூர் ஆகியோர் அபிநந்தனை வரவேற்றனர். அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வான் மகன் அபிநந்தனுடன் வீர நடை போட்ட அந்த பெண்மணி யார்? வாவ்.. ! ஆச்சர்ய தகவல்கள் வான் மகன் அபிநந்தனுடன் வீர நடை போட்ட அந்த பெண்மணி யார்? வாவ்.. ! ஆச்சர்ய தகவல்கள்

குவியும் வாழ்த்துகள்

குவியும் வாழ்த்துகள்

அபிநந்தனின் விடுதலையைப் பாராட்டி, குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இதனிடையே, அபிநந்தன் என்றால் வெல்கம் என அர்த்தம் என்றும் இனி அது மாறும் என்றும் பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

மோடி

மோடி

டெல்லியில் நடந்த கட்டுமான தொழில்நுட்ப இந்தியா 2019 என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

இந்தியா என்ன செய்கிறது?

இந்தியா என்ன செய்கிறது?

இந்தியா என்ன செய்கிறது என உலகமே உற்று கவனித்துக் கொண்டுள்ளது. அகராதியில் உள்ள வார்த்தைகளின் அர்த்தத்தை மாற்றும் ஆற்றல் இந்தியா பெற்றுள்ளது.

மாறுகிறது அர்த்தம்

மாறுகிறது அர்த்தம்

வரவேற்பதற்காக நேற்று அபிநந்தனின் பெயர் பயன்படுத்தப்பட்டது. தற்போது அபிநந்தனின் பெயருக்கான அர்த்தமே மாற உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

English summary
Prime Minister Modi, praising the courage and valour of the captured Indian Air Force pilot who returned to India from Pakistan, said the word "Abhinandan" used to mean welcome, but its meaning would change now.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X