அசைவ உணவு சாப்பிட்டதால் அராஜகம்! ஜேஎன்யு மாணவர்கள் பலர் காயம் -ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பு மீது புகார்
டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பினர் தாக்குதல் நடத்தியதால் வெடித்த மோதலில் 60 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.
புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பிக்கும் - இடதுசாரி மாணவர் அமைப்பினருக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.
இருவருக்கும் இடையிலான மோதல் கல்லூரியை கடந்து வெளியே தேசிய அரசியல் களத்திலும் எதிரொலித்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினர்.

அசைவ உணவு சாப்பிட்டவர்கள் மீது தாக்குதல்
இன்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் விடுதியில் அசைவ உணவு பரிமாறப்பட்டு உள்ளது. அப்போது அங்கு சென்ற ஏ.பி.வி.பி. மாணவர் அமைப்பினர் ராம் நவமி பண்டிகையான இன்று அசைவ உணவு சாப்பிடுவீர்களா என்ற சத்தமிட்டு, பரிமாறியவர்களையும், சாப்பிட்டவர்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இருதரப்புக்கு இடையே வெடித்த மோதல்
அத்துடன் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் அசைவ உணவு சாப்பிடக்கூடாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு மற்ற மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. தகவலறிந்து பல்கலைக்கழகத்துக்கு விரைந்த போலீசார், காயமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு
பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே மாணவர்கள் முழக்கங்களை எழுப்பி வரும் நிலையில், அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் பலர் காயமடைந்து இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த மோதலுக்கு ஆர்.எஸ்.எஸ். மாணவர் பிரிவான ஏ.பி.வி.பியே முழு காரணம் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

ரவுடிகளுடன் வந்த ஏபிவிபி அமைப்பினர்
ஏபிவிபி அமைப்பினர் ரவுடிகளை அழைத்து வந்து தாக்குதல் நடத்தியதாகவும் மோதலை உண்டாக்கியதாகவும் மாணவர் சங்க நிர்வாகிகள் தெரிவித்து இருக்கின்றனர். அதேபோல் பல்கலைக்கழக ஊழியர்களையும் ஏபிவிபி அமைப்பினர் தாக்கியதாக தெரிவித்துள்ள மாணவர் சங்கத்தினர், இனி அசைவ உணவுகளை சமைக்கக் கூடாது என மிரட்டியதாக கூறியுள்ளனர்.

ஏபிவிபி என்ன சொல்கிறது?
இதனை மறுத்துள்ள ஏபிவிபி அமைப்பினர் ராம் நவமி பண்டிகை பூஜையை கெடுக்கும் வகையில் இடதுசாரி மாணவர்கள் நடந்துகொண்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவியும் மாணவர் சங்க முன்னாள் துணைத் தலைவருமான சரிகா கூறுகையில், ஏபிவிபி அமைப்பினர் பல்கலைக்கழகத்தில் வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். அசைவத்துக்கு தடை விதிக்கும் ஏபிவிபியின் முடிவை எதிர்த்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 50 முதல் 60 பேர் வரை காயமடைந்தனர்.
|
வெளியான வீடியோ
பல்கலைக்கழகத்தின் காவேரி விடுதியில் உள்ள மாணவர்கள் இரவு அசைவ உணவு சாப்பிடும்போது ஏபிவிபி அமைப்பினர் தகராறு செய்யும் வீடியோவை அனைத்து இந்திய மாணவர் சங்கமான (AISA)வின் தேசிய தலைவர் சாய் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். "உணவு என்பது அவரவர் விருப்பம் என்றும், ஏபிவிபியின் இந்த அராஜத்துக்கு பல்கலைக்கழக துணை வேந்தர் கண்டனம் தெரிவிப்பாரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி போலீஸ் உறுதி
இதனிடையே பல்கலைக்கழக வளாகத்தில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளதாக டெல்லி துணை ஆணையர் மனோஜ் சி தெரிவித்துள்ளார். இருதரப்பு மாணவர்களும் தற்போது அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தி வருவதாக அவர் கூறினார். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மோதல் குறித்து கிடைத்த புகாரின் அடிப்படையில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications