டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை செல்லும் பாகிஸ்தான் பிரதமருக்கு இந்தியா செய்யும்பேருதவி ... எப்படி தெரியுமா!

Google Oneindia Tamil News

டெல்லி: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று இலங்கை செல்ல உள்ளார். அவர் இந்திய வான்வெளி பாதை வழியாக இலங்கை செல்ல இந்தியா அனுமதித்து உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி சவூதி அரேபியா மற்றும் அமெரிக்கா செல்வதற்கு பாகிஸ்தான் வான்வெளி பாதை வழியாக செல்லவிருந்த நிலையில் பாகிஸ்தான் அதற்கு அனுமதி மறுத்தது.

எந்த ஒரு நாடும் முட்டி மோதிக் கொண்டாலும் சாதாரண சூழ்நிலைகளில் அந்த நாடுகளின் வி.வி.ஐ.பி விமானங்களுக்கு தங்களது வான்வெளி பாதையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

பாகிஸ்தானின் அணுகுமுறை

பாகிஸ்தானின் அணுகுமுறை

பாகிஸ்தான் எப்போது தனி நாடு ஆகியதோ அன்றில் இருந்தே இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் பாம்பும், கீரியுமா உள்ளன. ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என அறிவிக்கப்பட்ட போதிலும், காஷ்மீரின் சில பகுதிகள் எங்களுக்கு சொந்தமானது என்று பாகிஸ்தான் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது. காஷ்மீரில் பிரிவினைவாத தலைவர்களை தூண்டி விட்டு, அங்குள்ள வாலிபர்களை வன்முறை பாதைக்கு இழுத்து விட்டு இந்தியாவுக்கு எதிராக ஆயுதமாக பயன்படுத்தியது பாகிஸ்தான்.

உறவை முறித்துக் கொண்ட இந்தியா

உறவை முறித்துக் கொண்ட இந்தியா

இதற்கு ஒரு முடிவு கட்ட ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை அதிரடியாக ரத்து செய்த மத்திய அரசு, அதனை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. ஆனாலும் தொடர்ந்து இந்திய எல்லையை சீண்டுவதில் பாகிஸ்தான் ராணுவத்தினர் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் புகுவதற்கு வசதியாக பயங்கரவாதிகளுக்கு உதவிகளை செய்து வருகிறது பாகிஸ்தான். தற்போது பாகிஸ்தான் உறவை முழுமையாக முறித்துக் கொண்டுள்ளது இந்தியா.

வான்வெளி பாதையில் செல்ல அனுமதி

வான்வெளி பாதையில் செல்ல அனுமதி

இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று இலங்கை செல்ல உள்ளார். அவர் இந்திய வான்வெளி பாதை வழியாக இலங்கை செல்ல இந்தியா அனுமதித்து உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எந்த ஒரு நாடும் முட்டி மோதிக் கொண்டாலும் சாதாரண சூழ்நிலைகளில் அந்த நாடுகளின் வி.வி.ஐ.பி விமானங்களுக்கு தங்களது வான்வெளி பாதையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதுதான் நடைமுறையாகும்.

பாகிஸ்தான் மறுத்து இருந்தது

பாகிஸ்தான் மறுத்து இருந்தது

ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி சவூதி அரேபியா மற்றும் அமெரிக்கா செல்வதற்கு பாகிஸ்தான் வான்வெளி பாதை வழியாக செல்லவிருந்த நிலையில் பாகிஸ்தான் அதற்கு அனுமதி மறுத்தது. ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்து இந்தியா அத்துமீறல் செய்ததால் வான்வெளியை பயன்படுத்துவதற்கு பாகிஸ்தான் அரசு மறுத்தது. ஆனால் தற்போது இந்தியா இதனை மனதில் கொள்ளாமல் தனது வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தானுக்கு அனுமதி கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Pakistani Prime Minister Imran Khan is scheduled to visit Sri Lanka today. According to reports, India has allowed him to travel to Sri Lanka via Indian airspace
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X