நித்தியானந்தாவுக்கு “குணிந்து கும்பிடு”.. மோடியா அது? கைலாசா தேர்தல் நேரம் என கலாய்த்த பிரகாஷ் ராஜ்
பிரதமர் நரேந்திர மோடி நித்தியானந்தா முன் குணிந்தபடி கும்பிடு போடுவதை போன்று இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, பிரதமர் மோடி கைலாசாவுக்கு செல்லும்போது என்று பதிவிட்டு உள்ளார்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நித்தியானந்தா முன் குணிந்தபடி கும்பிடு போடுவதை போன்று இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் ரீட்வீட் செய்து இருக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ், கைலாசாவில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்தில் என்று பதிவிட்டு இருக்கிறார்.
பாலியல் சர்ச்சைகளுக்கு பெயர்போன சாமியார் நித்தியானந்தா, தன்னிடம் வரும் பெண் பக்தர்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதுடன், அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இப்படி பல்வேறு வழக்குகளை வைத்துக்கொண்டு இருக்கும் நித்தியானந்தா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்து மாயமானார். அவர் எங்கு சென்றார் என்று மத்திய அரசுக்கே தெரியாத நிலையில் கொரோனா ஊரடங்கின்போது யூடியூபில் தோன்றி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

யுனைடேட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா
கைலாசா என்ற நாட்டை தான் உருவாக்கி இருப்பதாக அறிவித்த நித்தியானந்தா அதற்கென தனி கொடி, சின்னம், அமைச்சகங்களை அறிவித்தார். பாஸ்போர்ட் பெறவும், குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவும் அழைப்பு விடுத்து இணையதள முகவரியையும் வழங்கி உள்ளார். அடிக்கடி யூடியூப் மூலம் தோன்று பக்தர்களுக்கு அருள் வாக்கும் வழங்கி வருகிறார்.

எழும் கேள்விகள்
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தா எப்படி நாட்டை விட்டே தப்பி சென்றார்? அவரால் எப்படி கைலாசா என்ற நாட்டை உருவாக்க முடிந்தது? அது எங்கு இருக்கிறது? ஒருவேளை அவர் இந்தியாவில் இருந்துகொண்டே பேசுகிறாரா? மத்திய அரசாலாயே கண்டுபிடிக்க முடியாத கைலாசாவுக்கு அவரது பக்தர்கள் எப்படி செல்கிறார்கள்? என்ற கேள்விகளுக்கு இன்னும் விடை இடைக்கவில்லை.

வைரலான பேச்சுக்கள்
ஆப்பிரிக்கா அருகே உள்ள ஒரு தீவுதான் என்ற ஒரு தகவலும் பரவியது. சிலர் தென் அமெரிக்கா அருகே உள்ள தீவு என்று கூறுகிறார்கள். அண்மையில் ஐநா கூட்டத்தில் கைலாசா நாட்டின் பிரதிநிதி பங்கேற்றதாக புகைப்படங்கள் வெளியாகின. யூடியூப் சேனலில் நித்தியானந்தாவின் பேச்சுகள் அனைத்தும் தினசரி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி நகைச்சுவையையும் விவாதத்தையும் ஏற்படுத்தின.

சமாதி நிலை
ஆனால், அடுத்த சில மாதங்களில் நித்தியானந்தா குறித்தும், கைலாசா குறித்தும் எந்த தகவலும் வெளிவராத நிலையில், நித்தியானந்தாவின் உடல் நிலை மோசமடைந்து இருப்பதாகவும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது. அவர் சமாதி நிலைக்கு சென்று விட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் கடந்த ஜூலை மாதம் பக்தர்கள் மத்தியில் தோன்றி பேசினார்.

இலங்கையிடம் தஞ்சம்
இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் இலங்கையில் தனக்கு தஞ்சம் கொடுக்குமாறு அந்நாட்டு அதிபருக்கு நித்தியானந்தா கடிதம் எழுதியதாக செய்திகள் வெளியாகின. "நித்தியானந்தாவுக்கு உடனடி மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும், கைலாசாவில் போதிய சிகிச்சை அளிக்க முடியாததால், அவருக்கு ஏற்பட்டு உள்ள உடல்நிலை குறைபாட்டை சரி செய்ய இலங்கையில் தஞ்சம் அளிக்க வேண்டும்." என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

பிரகாஷ் ராஜ் கலாய்
இந்த நிலையில், "பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி பிரமுகர் ஒய்.சதீஷ் ரெட்டி, ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி நித்தியானந்தா முன் குணிந்தபடி கும்பிடு போடுவதை போன்று இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, பிரதமர் மோடி யுனைடேட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாசாவுக்கு செல்லும்போது." என்று குறிப்பிட்டு இருந்தார். இதனை ட்விட்டரில் ரீட்வீட் செய்த நடிகர் பிரகாஷ் ராஜ், கைலாசாவில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்தில் என்று குறிப்பிட்டு உள்ளார் இருக்கிறார்.












Click it and Unblock the Notifications