Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வசமாக சிக்கிய நடிகர்கள்.. பிரகாஷ் ராஜ் - விஜய் தேவரகொண்டா உள்பட 29 பிரபலங்கள் மீது ED வழக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த புகாரில் நடிகர்கள், யூடியூப் பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. நடிகர் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, நடிகை நிதி அகர்வால் உள்பட 29 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நம் நாட்டில் சூதாட்ட செயலியை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே இந்த செயலியில் பணம் சம்பாதிக்க முடியும். இதனால் பலரும் இந்த செயலியால் பணத்தை இழப்பதை மட்டுமே வாடிக்கையாக வைத்துள்ளனர். இன்னும் சில லட்சக்கணக்கில் பணம் பறிகொடுத்த விரக்தியில் தற்கொலை செய்து வருகின்றனர்.

actor-prakasha-raj-vijaya-devarkonda-rana-daggubati-among-29-celebrities-under-ed-investigation-in

இந்நிலையில் தான், சூதாட்ட செயலிகளை தடை செய்ய வேண்டும். எந்த காரணம் கொண்டும் நம் நாட்டில் இந்த செயலி பயன்பாட்டில் இருக்க கூடாது என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்துவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது.

இதற்கிடையே தான் சட்டவிரோத சூதாட்ட செயலிகளை புரோமோஷன் செய்வதற்காக அந்த நிறுவனங்கள் பிரபலங்களை பயன்படுத்தியதும், அவர்களுக்கு பெருமளவு தொகையை வழங்கியதும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதும் தெரியவந்தது.இதுதொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அமலாக்கத்துறை சார்பில் சட்டவிரோத சூதாட்ட செயலிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு அளிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, நடிகை நிதி அகர்வால், பிரணிதா சுபாஷ், மஞ்சு லட்சுமி உள்பட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை ECIR பதிவு செய்துள்ளது. அதாவது நடிகர்கள், நடிகைகள் உள்பட 29 பிரபலங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

தெலுங்கனா மாநிலம் ஹைதராபாத் அருகே சைபராபாத் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இப்போது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதற்கு விஜய் தேவரகொண்டா, நடிகர் பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது விஜய் தேவரகொண்டா தரப்பில், ‛ஏ3 நிறுவனத்திற்கு விஜய் தேவரகொண்டா பிராண்ட் தூதர் மட்டுமே. உச்ச நீதிமன்றம் ரம்மியை திறமை சார்ந்த விளையாட்டாக அங்கீகரித்துள்ளது. அதேபோல் சூதாட்டத்தில் இருந்து விலக்கி உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ராணா டகுபதி தனது சட்ட ஆலோசகர்கள் மூலம் வெளியிட்ட அறிக்கையில், ‛‛ திறன் சார்ந்த கேமிங் செயலியுடனான தனது தொடர்பு கடந்த 2017 ம் ஆண்டில் முடிவுக்கு வந்துவிட்டது. சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட மற்றம் சட்டப்பூர்வ சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட்ட நிறுவனமாக அது இருந்தது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் பிரகாஷ் ராஜ் சார்பில், ‛‛கடந்த 2016ம் ஆண்டில் ஜங்லீ ரம்மியை விளப்படுத்தினேன். ஆனால் ஒரு ஆண்டுக்குள் எனது ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. இது தொழில்நுட்ப ரீதியான சட்டத்துக்கு உட்பட்டது என்றாலும் நெறிமுறைகளில் பிரச்சனை இருந்தது. அதன்பிறகு எந்த சூதாட்ட செயலியையும் விளம்பரப்படுத்தவில்லை'' என்றார்.

முன்னதாக சட்டவிரோத சூதாட்ட செயலிகளை புரோமோட் செய்த புகாரில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அதேபோல் பாலிவுட் நடிகர் சோனு சூட் மற்றும் நடிகை ஊர்வசி ரவுடேலா ஆகியோரிடமும் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+