Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Meera Mithun: மனநல மருத்துவமனையில் 2ஆவது நாளாக மீரா மிதுனுக்கு சிகிச்சை! என்ன செய்கிறார்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுன் டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது டெல்லியில் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் எப்போது சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாடல் அழகி, பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் (34) பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானது. இதை அவரே வெளியிட்டிருந்தார். இது பார்த்த சமூக ஆர்வலர்கள், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீஸில் புகார் அளித்திருந்தார்.

meera mithun delhi police

இந்த புகார் குறித்து விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மீரா மிதுனையும் அவரது நண்பர் சாம் அபிஷேக்கையும் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்தனர்.

இதைத் தொடர்ந்து இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணையின் போது மீரா மிதுன் தொடர்ந்து ஆஜராகாமலேயே இருந்தார்.

இதையடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி மீரா மிதுனுக்கு எதிராக ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.இதையடுத்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 3 ஆண்டுகளான நிலையில் அவரை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இது குறித்து நீதிமன்றம் கேட்ட போது, "மீரா மிதுன் அடிக்கடி தங்குமிடத்தை மாற்றி வருகிறார். இதனால் அவரை கைது செய்ய முடியவில்லை.

அவரது மொபைல் போனும் சுவிட்ச் செய்யப்பட்டுள்ளது" என போலீஸார், நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தனர். பிடிவாரன்ட் உத்தரவை நிறைவேற்றாததாக போலீஸாரின் நடவடிக்கைக்கு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

இதனிடையே தன் மகளை கண்டுபிடித்து தரக் கோரி மீரா மிதுனின் தாய் ஷியாமளா, கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அளித்த புகார் குறித்தும் போலீஸார் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் மீரா மிதுனின் தாய் தரப்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் டெல்லி தெருக்களில் தன் மகள் சுற்றி வருவதாகவும் அவரை மீட்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்றம், சென்னை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு வாயிலாக, டெல்லி சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு தகவல் தெரிவித்து மீரா மிதுனை மீட்க உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதி எஸ் கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர் ஆஜராகி, "டெல்லி போலீஸார் உதவியுடன் டெல்லி சட்ட பணிகள் ஆணைக் குழுவால் மீரா மிதுன் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவர் தற்போது டெல்லி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்" என தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, டெல்லியில் உள்ள மீரா மிதுனை வரும் 11 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் மீரா மிதுனின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கு நேற்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு சிறப்பு வழக்கறிஞர் சுதாகர் ஆஜராகி, "டெல்லியில் உள்ள மனநல மருத்துவமனையில் மீரா மிதுன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நல பாதிப்பால் நீதிமன்ற உத்தரவை தனிப்படை போலீஸார் நிறைவேற்றவில்லை.

இவருக்கு உடல்நலம் தேறி பயணம் செய்ய தகுதியானவர் என மருத்துவர்கள் சான்றளித்ததும் அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார் என தெரிவித்தார். இதை கேட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார். தற்போது 2ஆவது நாளாக சிகிச்சை பெற்று வரும் மீரா மிதுன் நலமுடன் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+