அதானி விவகாரம்.. காங்கிரஸ் மெகாமூவ்..எல்ஐசி, எஸ்பிஐக்கு குறி.. பிப்.,6ல் நாடு முழுவதும் போராட்டம்
அதானி குழுமத்தில் எல்ஐசி முதலீடு செய்துள்ள நிலையில் எஸ்பிஐ கடன் வழங்கி உள்ளது. தற்போது முறைகேடு புகார் எழுந்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி எல்ஐசி, எஸ்பிஐ அலுவலகம் முன்பு பிப்ரவரி 6ல் நாடு தழுவிய போராட்டம் அறிவித்துள்ளத
டெல்லி: ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழுமம் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. அதானி குழுமத்தில் எல்ஐசி முதலீடு செய்துள்ள நிலையில் எஸ்பிஐ கடன் வழங்கி உள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை 2 நாளாக முடக்கின. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி மெகாமூவ் ஒன்றை கையில் எடுத்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் பிப்ரவரி 6ம் தேதி எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கி முன்பு போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
அதானி.. குஜராத்தை சேர்ந்த இவர் இந்தியாவின் முன்னணி தொழிலதிபராக இருந்து வருகிறார். மின்சாரம் முதல் துறைமுகம் வரையிலான அனைத்து தொழில்களிலும் கால்பதித்து உலகின் மிகப்பெரிய பணக்காரர் என்ற நிலைக்கு சென்றார்.
குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளில் அவரது வளர்ச்சி என்பது மிகமிக பெரியதாக இருந்தது. இந்நிலையில் தான் தற்போது அதானி மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் தான் இதற்கு காரணம்.

ஹிண்டன்பர்க் அறிக்கை
இந்த ஹிண்டன்பர்க் சார்பில் கடந்த மாதம் 413 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. அதில் அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு அதிக கடன் உள்ளது. பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தி லாபம் காண்கிறது என பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தது. இதையடுத்து அதானி குழும பங்குகள் சரிய தொடங்கியது. உலக பணக்காரர்களின் பட்டியலில் இருந்து மெல்ல மெல்ல சரிய தொடங்கிய அதானி தற்போது உலக பணக்காரர்களின் பட்டியலில் சரிய தொடங்கி உள்ளார்.

பின்தங்கும் அதானி
இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலக பணக்காரர்கள் பட்டியலில் 133 பில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் மூன்றாவது இடத்தில் இருந்த அதானி தற்போது பின்தங்கி உள்ளார். நேற்றைய நிலவரப்படி கடும் சரிவால் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில்20வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருந்தார். தொடர்ந்து சரிவை சந்திப்பதால் அவர் பணக்காரர்கள் பட்டியலில் இன்னும் பின்தங்கவார் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

எல்ஐசி முதலீடு-எஸ்பிஐ கடன்
இந்நிலையில் தான் தற்போது அதானி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. அதாவது இந்தியாவில் நடுத்தர மக்கள் எல்ஐசி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிகளில் சேமிப்பு வைத்துள்ளனர். இந்நிலையில் தான் கடன் மற்றும் பங்குகள் வகையில் ரூ.36,474 கோடியை எல்ஐசியும், முதலீடு செய்துள்ளதாகவும், ஸ்டேட் வங்கி ரூ. 21 ஆயிரம் கோடி வரை அதானி குழுமத்துக்கு கடன் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதானி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 2வது நாளாக இன்றும் நாடாளுமன்ற சபையை முடக்கின.

காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு
மேலும் அதானி குழும முறைகேடு பற்றி மத்திய அரசு விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் தான் அதானி குழுமம் மீதான புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள நாடு முழுவதும் போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் பிப்ரவரி 6ம் தேதி எல்ஐசி மற்றும் ஸ்டேட் வங்கி அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கேசி வேணுகோபால் கூறியது என்ன?
இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், எம்பியுமான கேசி வேணுகோபால் "மத்திய அரசு பொதுமக்களின் பணத்தை தங்களின் நெருங்கிய நண்பர்களுக்கு ஆதரவாக பயன்படுத்துகிறது. இதனால் நாடு முழுவதும் எல்ஐசி மற்றும் ஸ்டேட் வங்கி அலுவலகங்கள் முன்பு வரும் 6ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. எல்ஐசி மற்றும் ஸ்டேட் வங்கி போன்ற பொதுத்துறை நிறுவனம் மற்றும் வங்கிகளை அதானி குழுமத்துக்கு ஆதரவாக பயன்படுத்துவதால் நடுத்தர மக்களின் சேமிப்பில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்துகிறது." என்றார்.












Click it and Unblock the Notifications