ஆந்திராவில் 'அதானி கனெக்ஸ்' அமைக்கும் 1 ஜிகாவாட் ஏஐ தரவு மையம்! டிஜிட்டல் கட்டமைப்பில் புதிய மைல் கல்
விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில், அதானி கனெக்ஸ் பெரும் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. 1 ஜிகாவாட் செயற்கை நுண்ணறிவு டேட்டா சென்டர் அமைகிறது. இது அதானி, எட்ஜ்கனெக்ஸ்சின் கூட்டு முயற்சியாகும். இதற்காக 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்படுகிறது. இது இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்புக்கு மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் இந்தியாவின் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும். கிளவுட் கம்ப்யூட்டிங், டிஜிட்டல் சேவைகளுக்கும் இது உதவும். நாட்டில் உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பை உருவாக்க அதானி குழுமம் உறுதிபூண்டுள்ள நிலையில் அதற்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் விதமாக இந்த முதலீடு அமைந்துள்ளது.

டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் AI திறன்
டிஜிட்டல் பயன்பாடு வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பெரிய, திறமையான டேட்டா சென்டர்கள் தேவை. இதனை நோக்கியே இந்த தரவு மையம் அமைகிறது. இந்த திட்டத்தின் முக்கிய பங்காளராக அதானி கனெக்ஸ் இருக்கும். ஹைப்பர்ஸ்கேலர், செயற்கை நுண்ணறிவு வணிகங்களுக்கு இது உதவும். விசாகப்பட்டினம் தளத்தின் முக்கிய பலங்களில் ஒன்றாக அதன் ஒருங்கிணைந்த எரிசக்தி கட்டமைப்பு இருக்கும்.
மின்உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்பரிமாற்றம் மற்றும் பயன்பாட்டு உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் அதானி குழுமத்தின் திறன்களை பயன்படுத்தி, இந்த திட்டம் தடையற்ற, நம்பகமான மற்றும் நிலைத்த மின்சார வழங்கலை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நவீன டேட்டா சென்டர் செயல்பாடுகளுக்கான மிக முக்கிய தேவைகளில் ஒன்றாக எரிசக்தி பாதுகாப்பு இருப்பதால், இது இந்த திட்டத்தின் முக்கிய தனிச்சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதாரப் பயன்கள் மற்றும் பிராந்திய வளர்ச்சி
இத்திட்டம் ஆந்திரப் பிரதேசத்திற்கு உள்கட்டமைப்புடன் பொருளாதாரப்பலனையும் தரும். உள்ளூர், பன்னாட்டு முதலீடுகளை ஈர்க்கும். கட்டுமானம், பொறியியல், தொழில்நுட்பம், ஆதரவு சேவைகளில் வேலைவாய்ப்புகள் உருவாகும். அப்பகுதியில் புதுமைக்கான சூழல் வளரும். விசாகப்பட்டினம் ஒரு தொழில்துறை, தளவாட மையமாக உள்ளது. இந்த முதலீட்டால் அது முக்கியமான டிஜிட்டல் நுழைவாயிலாக மாறும். பெரிய தொழில்நுட்ப உள்கட்டமைப்பை ஈர்க்கும் இடமாக இது உள்ளது.
செயற்கை நுண்ணறிவு, கிளவுட் வளர்ச்சியால் டேட்டா சென்டர் தேவை அதிகரித்துள்ளது. உலகளவில் இந்த தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இன்னொரு பக்கம், இந்தியா வேகமாக வளரும் டிஜிட்டல் பொருளாதாரமாக உள்ளது. எனவே, இம்முதலீடுகள் இந்தியாவை உலகளாவிய மையமாக நிலைநிறுத்தும்.
100 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு
இத்திட்டப் பணிகள் வாடிக்கையாளர் தேவைக்கேற்ப கட்டங்களாக நடக்கும். இது எதிர்காலத் திறனுள்ள சூழலியலை உருவாக்கும். சந்தைத் தேவைகளுடன் இத்திட்டம் விரிவடையும். செயல் திறன், நீண்டகால நிலைத்தன்மை பாதுகாக்கப்படும்.
இது ஒரு நெகிழ்வான அணுகுமுறை. இந்த திட்டம் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (AI), எரிசக்தி மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அடித்தளத்தை உருவாக்கும் நோக்கில் அடுத்த பத்து ஆண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யும் அதானி குழுமத்தின் விரிவான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாகும்.
தொழில்நுட்பம், புதுமை மற்றும் நிலையான வளர்ச்சியில் உலகளாவில் முன்னணி நாடாக இந்தியா உருவாகும் இலக்கை ஆதரிக்கும் வகையில், எதிர்காலத்திற்கும் ஏற்ற தளங்களை உருவாக்குவதில் குழுமம் தனது கவனத்தை மேலும் வலுப்படுத்தும் விதமாக இது அமைந்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications