டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காவிரி டெல்டா, கொரோனா தடுப்பு.. மோடியை ராஜ்யசபாவில் புகழ்ந்து தள்ளிய அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன்

Google Oneindia Tamil News

டெல்லி: காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது, கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆகியவற்றை முன்வைத்து ராஜ்யசபாவில் அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன், பிரதமர் மோடியை பாராட்டினார்.

நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் விவசாய சட்டங்களை முன்வைத்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் மத்திய அரசுடன் மல்லுக்கட்டி வருகின்றனர். இந்த நிலையில் இன்று ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அதிமுக எம்.பி நவநீதகிருஷ்ணன் பேசியதாவது:

ADMK MP Navaneethakrishnan praises PM Modi on Cauvery Delta issue

காவிரி டெல்டாவில் இருந்து 15 எம்.பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் கூட விவசாயிகள் நலன் காக்க எதையும் செய்யவில்லை. காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து கடந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் சுட்டிக்காட்டினேன்.

இதனைத் தொடர்ந்து பிற அமைச்சகங்கள் இந்த விவகாரத்தை பரிசீலிக்க பரிந்துரைத்தார் பிரதமர் மோடி. இதன்பின்னரே காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டத்துக்கு சுற்றுச் சூழல் அமைச்சகம் உடனடியாக தடையில்லா சான்று வழங்கியது. இதற்காக பிரதமர் மோடிக்கு காவிரி டெல்டா விவசாயிகள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்க கூடாது: பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்! காவிரியில் மேகதாது அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்க கூடாது: பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்!

இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவிக்கிறேன். இவ்வாறு நவநீதகிருஷ்ணன் பேசினார்.

English summary
ADMK MP Navaneethakrishnan praises PM Modi on Cauvery Delta issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X