டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஷாஹீன் பாக்கில் போராடும் மக்களுக்கு உணவளிப்பதற்காக தனது வீட்டையே விற்ற சீக்கிய வழக்கறிஞர்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஷாஹீன் பாக் போராட்டமும்... பின்னணியும்

    டெல்லி: டெல்லி ஷாஹீக் பாக்கில் சிஏஏவுக்கு எதிராக 57 நாட்களாக இடை விடமால் போராட்டம் நடத்தி வரும் மக்களுக்கு உணவுஅளிப்பதற்காக தனது வீட்டையே விற்று விட்டார் டிஎஸ் பிந்திரா என்ற சீக்கிய வழக்கறிஞர்.

    நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு போராட்டங்கள் நடந்து வருகிறது. இதேபோல் என்ஆர்சிக்கு எதிராகவும் போராடி வருகிறார்கள். இந்த போராட்டங்களுக்கு மையப்புள்ளியாக டெல்லி ஷாஹீன் பாக் போராட்டம் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 15 ம் ம் தேதி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தொடங்கிய போராட்டம், வேலைவாய்ப்பின்மை, பெண்கள் பாதுகாப்பு போன்ற பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து நடந்து வருகிறது.

     advocate ds bindra sale his flat to feed shaheen bagh protest people

    நாட்டின் பலரது கவனத்தை ஈர்த்த இந்தப் போராட்டத்துக்கு நடிகை தீபிகா படுகோனே உள்பட பல சினிமா பிரபலங்கள், எழுத்தாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்த போராட்டக்காரர்களுக்கு உணவளிப்பதற்காக வழக்கறிஞர் டி.எஸ்.பிந்த்ரா என்பவர் தன் மூன்று பிளாட்டில் ஒன்றை விற்றிருக்கிறார்

    அத்துடன் குருத்வாராவுக்கு சேர்த்து வைத்துள்ள பணத்தை இதற்குப் பயன்படுத்துமாறு அவருடைய பிள்ளைகள் ஆலோசனை தந்திருக்கிறார்கள்.

    இடஒதுக்கீட்டை அழிக்க நினைக்கும் மோடி, மோகன் பகவத் கனவு நிறைவேறாது: ராகுல் அட்டாக்இடஒதுக்கீட்டை அழிக்க நினைக்கும் மோடி, மோகன் பகவத் கனவு நிறைவேறாது: ராகுல் அட்டாக்

    முஸ்தஃபாபாத் மற்றும் குரேஜி ஆகிய இடங்களில் சுமார் ஐந்து நாட்களாக 'லங்கர்' நடத்துவதாக டிஎஸ் பிந்திரா கூறினார். பொது மக்களுக்கு உணவளிக்கும் முறையை 'லங்கர்' என சீக்கியர்கள் அழைத்து வருகிறார்கள். வீட்டை விற்று பொதுமக்களுக்கு உணவு அளிக்கும் பிந்திராவின் பலரது பாராட்டை பெற்றுள்ளது.

    English summary
    advocate ds bindra sale his flat to feed Delhi shaheen bagh people who protest against CAA
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X