ஆபாசம்.. "டிரஸை கழட்டுனா புரியும்! நைட் என்கிட்ட வா.." இந்திய செவிலியரிடம் அத்துமீறிய ஆப்பிரிக்கர்
டெல்லி: ஆப்ரிக்கா நாட்டை சேர்ந்த ஒருவர் இந்தியச் செவிலியரிடம் மிகவும் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பேசும் வீடியோ இணையத்தில் பரவி பகீர் கிளப்பி வருகிறது.
இந்தியா மருத்துவத் துறையில் மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இதனால் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சிகிச்சைக்காக இந்தியா வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. பின்தங்கிய நாடுகளில் இருந்து மட்டுமின்றி வளர்ந்த நாடுகளில் இருந்தும் கூட நோயாளிகள் இந்தியா வருகிறார்கள்.

அப்படி வரும் நோயாளிகள் சிகிச்சை முடிந்து பிறகு சொந்த நாட்டிற்குத் திரும்புவார்கள். ஆனால், அப்படி நோயாளிகளாக வரும் சிலர், நமது செவிலியர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மிக மோசமாக இருக்கிறது.
பகீர் வீடியோ: அப்படியொரு மோசமான சம்பவம் குறித்த வீடியோ தான் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இருப்பினும், அந்த வீடியோவில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஒருவர் தனக்குச் சிகிச்சை அளிக்கும் செவிலியர் ஒருவரிடம் ஆபாசமாகப் பேசி அதை வீடியோவாகவும் எடுத்துள்ளார். அவரது அசிங்கமான மற்றும் ஆபாசமான பேச்சு அனைத்தும் அந்த வீடியோவில் தெளிவாகப் பதிவாக இருக்கிறது. இந்த வீடியோ எங்கே எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் இல்லை.
இணையத்தில் வேகமாகப் பரவும் அந்த வீடியோவில், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அந்த நபர் செவிலியரிடம், "உனக்கு ஆப்பிரிக்கா பிடிக்குமா.. ஆப்பிரிக்கா நன்றாக இருக்கும்" என்கிறார். அதற்கு அந்த செவிலியர், "இல்லை.. எனக்கு ஆப்பிரிக்கா பிடிக்காது" எனச் சொல்கிறார். தொடக்கத்தில் அந்த வீடியோ நோயாளி- செவிலியர் இடையே நடக்கும் கேஷுவல் உரையாடல் போலவே இருந்துள்ளது. இருப்பினும், சில நொடிகளில் அது அப்படியே ஆபாச பேச்சாக மாறியிருக்கிறது.
ஆபாச பேச்சு: அந்த நோயாளி, "எனது ஆடைகளைக் கழற்றினால்.. நீ ஆப்பிரிக்கர்களை விரும்பத் தொடங்குவாய் என நினைக்கிறேன்" என்கிறார். இது அத்துடன் நிற்கவில்லை. அந்த நோயாளியின் ஆபாச பேச்சு மேலும் தொடர்ந்துள்ளது. இந்தியா நல்லா இல்லை என்று அந்த நோயாளி மீண்டும் கூறுகிறார். அதற்கு அந்த செவிலியர், "இந்தியா நல்லா இல்லை எனச் சொல்கிறீர்கள். ஆனால், உங்கள் சிகிச்சைக்காக மட்டும் இந்தியா வந்துள்ளீர்களே.." என்று பதிலடி கொடுத்துள்ளார்.
அதற்கு அவர், "இந்தியா சிகிச்சைக்கு நல்ல நாடு தான்.. ஆனால், படுக்கைக்கு இல்லை" என்று ஆபாசமாகப் பேசியுள்ளார். மேலும், இரவில் படுக்கைக்கு வந்தால் ஆப்பிரிக்கா எவ்வளவு வலிமையானது என்பதைக் காட்டுவதாகவும் அந்த நோயாளி ஆபாசமாகப் பேசியுள்ளார். இவ்வளவு மோசமாகவும் ஆபாசமாகவும் பேசிய போதிலும், அந்த செவிலியர் அமைதியாக இருந்தார். நோயாளி பேசியதைக் கண்டு கொள்ளாமல் தனது பணிகளைச் செய்தார்.
WATCH | Nurse hits back at African patient who said 'India not good for bed'👇#India #Africa #Nurse #Hospital #Patient pic.twitter.com/md5pIOx4i3
— Free Press Journal (@fpjindia) February 29, 2024
செவிலியருக்குப் பாராட்டு: இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வரும் நிலையில், அந்த செவிலியரை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இவ்வளவு மோசமாகவும் கீழ்த்தரமாகவும் பேசிய போதிலும் அமைதியாகத் தனது கடைமையைச் செய்த செவிலியரைப் பாராட்டியே தீர வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
மறுபுறம் அந்த நோயாளியின் பேச்சுக்கும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. செவிலியரைத் துன்புறுத்திய அந்த நபரைக் கைது செய்ய வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும், அந்த நபர் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் இல்லை.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications