ஷரத்தா கொலை வழக்கு.. தடயத்தை மறைக்க எலும்புகளை பவுடராக்கிய அப்தாப்..டெல்லி போலீசார் பரபர தகவல்
தடயத்தை மறைக்க அப்தாப் ஷ்ரத்தாவின் எலும்புகளை பவுடராக்கியது தெரியவந்துள்ளது.
டெல்லி: ஷரத்தா கொலை வழக்கு தொடர்பாக டெல்லி போலீசார் 6,600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து இருந்த நிலையில், அது தொடர்பான சில முக்கிய தகவல்கள் டெல்லி போலீசார் தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் வசாய் நகரை சேர்ந்த இளம்பெண் ஷ்ரத்தா. மும்பையில் கால் செண்டரில் பணியாற்றி வந்த ஷர்த்தாவுக்கும் அப்தாப் அமீன் என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
நெருங்கி பழகிய இவர்கள் இருவரும் டெல்லியில் லிவிங் டு கெதர் முறையில் வசித்து வந்தனர்.

ஷ்ரத்தா கொலை வழக்கு
ஷ்ரத்தா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியதால், அவரை கொலை செய்த அப்தாப், அந்தக் கொலையை மறைக்க செய்த காரியங்கள் அனைத்தும் கிரைம் திரில்லர் படங்களை மிஞ்சும் அளவுக்கு அமைந்தது. டெல்லி மட்டும் அல்லாது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்படும் ஒரு கொலை வழக்காக மாறிய ஷர்த்தா வழக்கில் போலீசார் விசாரணையில் தினம் தினம் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி பலரையும் அதிர்ச்சி வைத்தது.

35 துண்டுகளாக வெட்டி..
கடந்த மே மாதமே ஷ்ரத்தாவை கொலை செய்து விட்டு, எதுவுமே நடக்காதது போல மிக சாதாரணமாக அப்தாப் நடமாடியது என சைக்கோ கொலையாளி போல நடந்து கொண்ட அப்தாப், ஷர்த்தா உடலை 35 துண்டுகளாக வெட்டி புதிதாக வாங்கிய பிரிட்ஜில் மூன்று வாரங்கள் வைத்து உடலின் ஒவ்வொரு பாகங்களாக வனப்பகுதியில் வீசினான். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய வழக்கில் கைதான அப்தாப் தற்போது டெல்லியில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறான்.

6,600 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்
இதனிடையே, இந்த வழக்கில் 6,600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை டெல்லி போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இந்த குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள தகவல் தொடர்பாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:- மீட்கபட்ட 20 உடல் பாகங்கள் டி.என்.ஏ சோதனையில் ஒத்துப்போனது. ஷரத்தாவின் உடல் பாகங்களை புதிதாக வாங்கிய பிரிட்ஜில் வைத்ததை அப்தாப் ஒப்புக்கொண்டுள்ளான்.

எலும்புகளை கிரைண்டரில் போட்டு...
ஷரத்தாவின் எலும்புகளை யாருக்கும் தெரியாமல் ஆக்க வேண்டும் என்பதற்காக கிரைண்டரில் போட்டு பவுடராக அப்தாப் மாற்றியிருக்கிறான். அதேபோல், கொலை செய்து 3 மாதங்கள் கழித்தே தலையை அப்தாப் அப்புறப்படுத்தியிருக்கிறான். ஷர்த்தாவை கொலை செய்து விட்டு மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த அப்தாப், அந்த பெண் பிளாட்டிற்கு வரும் போது பிரிட்ஜில் இருந்த உடல் பாகங்களை கிட்சன் அறைக்கு மாற்றி வைத்து இருந்து இருக்கிறான். பிறகு அந்த பெண் சென்ற மீண்டும் ஷரத்தாவின் உடல் பாகங்களை பிரிட்ஜில் வைத்ததை அப்தாப் ஒப்பு கொண்டான்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications