வீடு முழுக்க பத்தி! பிரிட்ஜில் தலையை வைத்து.. தினமும் பார்த்த அப்தாப்.. டெல்லி கொலையின் ஷாக் பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் காதலியை கொலை செய்த அப்தாப் என்ற காதலன் போலீசாரிடம் அதிர்ச்சி அளிக்கும் வாக்குமூலம் ஒன்றை கொடுத்துள்ளார்.

டெல்லியில் தன்னுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த சாரதா என்ற காதலியை கொலை செய்த அப்தாப் அமீன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ள சாரதா வற்புறுத்தியதால் இந்த கொலையை செய்ததாக அப்தாப் அமீன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இவர்கள் மும்பையில் டேட்டிங் ஆப் ஒன்றின் மூலம் நண்பர்கள் பின்னர் காதலர்கள் ஆகி உள்ளனர்.

காதல்

காதல்

இவர்களின் காதலுக்கு சாரதாவின் பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல் அப்தாப் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதில் திருமணம் செய்ய வேண்டும் என்று சாரதா நச்சரித்து வந்த நிலையில்தான் அப்தாப் அவரை கொலை செய்துள்ளார். கடந்த மே 18ம் தேதி சாரதாவை கொலை செய்தார். இத்தனை நாட்கள் கழித்து இப்போதுதான் கொலை பற்றி தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் அப்தாப் அமீன் கொலை செய்தது தொடர்பாக இன்னொரு அதிர்ச்சி அளிக்கும் தகவலையும் தெரிவித்து இருக்கிறார்.

எப்போது வாங்கினார்?

எப்போது வாங்கினார்?

அப்தாப் அமீன் இதில் சில அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை கொடுத்து இருக்கிறார். அதன்படி, சாராதாவை கொலை செய்த அன்று இரவே இவர் அதற்காக பிரிட்ஜ் ஒன்றை வாங்கி இருக்கிறார்.இந்த பிரிட்ஜ் 300 லிட்டர் கொண்ட பெரிய அளவு பிரிட்ஜ் ஆகும். உடல் பாகங்கள் அனைத்தையும் உள்ளே வைக்க வேண்டும் என்று அதை வாங்கியதாக அப்தாப் அமீன் கூறி உள்ளார். அதில்தான் சாரதாவின் உடல் பாகங்களை அடுக்கி வைத்ததாக வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்.

தலை

தலை

சாரதாவின் உடல் பாகங்களை தினமும் அதிகாலை 2 மணிக்கு அப்புறப்படுத்தி உள்ளார் . 35 துண்டுகளாக அந்த பாகங்களை அவர் வெட்டி இருக்கிறார். தினமும் இரண்டு பாகங்கள் என்று கணக்கில் அப்தாப் அமீன் 18 நாட்கள் அந்த பாகங்களை டெல்லியில் அப்புறப்படுத்தி உள்ளார். இதில் பெரும்பாலும் மெஹ்ராவ்லி காட்டு பகுதியில்தான் உடல் பாகங்களை போட்டு உள்ளதாக இவர் வாக்குமூலத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

விருப்பம்

விருப்பம்

அதேபோல் இவர் தலையை கடைசியில் அப்புறப்படுத்தி உள்ளார். தினமும் பிரிட்ஜை திறந்து தலையை மட்டும் பார்த்துள்ளார். சில முறை அதை கையில் எடுத்து பார்த்ததாகவும் வாக்குமூலத்தில் குறிப்பிட்டு உள்ளார். தலை நல்ல நிலையில் இருக்கிறதா இல்லை அழுகிவிட்டதா என்பதை கண்டுபிடிப்பதற்காக அதை எடுத்து பார்த்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவர் கொலைக்கு பயப்படவில்லை, ரத்தத்தை பார்த்து பயப்படவில்லை என்று முதல்கட்ட விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 பத்தி

பத்தி

அதோடு வீட்டில் இருந்து நாற்றம் வராமல் இருக்க தினமும் 30க்கும் மேற்பட்ட பத்திகளை வீட்டில் ஏற்றி உள்ளார். வீடு முழுக்க இதனால் புகை மூட்டமாக இருந்துள்ளது. வீடு முழுக்க ஆங்காங்கே பத்திகளை வைத்து வாசனையை சமாளித்து உள்ளார். அதேபோல் நாற்றத்தை போக்கும் ரூம் பிரெஷனர்களையும் ஏற்றி உள்ளார். இடைப்பட்ட நாட்களில் சிலர் அவரின் வீடுகளுக்கு வந்து உள்ளனர். அவர்களால் கூட அங்கே நடந்த கொலையை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அவர் சாதுர்யமாக செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+