குலாம் நபி ஆசாத் சொன்ன "அந்த" வார்த்தை.. கொந்தளித்த ஆதரவாளர்கள்! மீண்டும் காங்கிரஸுக்கு படையெடுப்பு
டெல்லி: காஷ்மீரில் குலாம் நபி ஆசாத் கட்சியை விட்டுப் பிரியும் போது அவருடன் சென்ற பல முக்கிய தலைவர்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் சில காலத்திற்கு முன்பு வரை வரிசையாக பல்வேறு தலைவர்களும் விலகி வந்தனர். சிந்தியா, கபில் சிபில் என இந்த முக்கிய தலைவர்கள் காங்கிரஸில் இருந்து விலகினர். அப்படிதான் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் அக்கட்சியில் இருந்து விலகினார்.

அவர் காங்கிரஸில் இருந்து விலங்கும் போது, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைமையைக் கடுமையாகச் சாடினார்.. காங்கிரஸ் கட்சி கிட்டதட்ட முடிந்துவிட்டது என்றும் சாடினார்.
குலாம் நபி ஆசாத்: அதைத் தொடர்ந்து அவர் காஷ்மீரில் புதிய கட்சியைத் தொடங்கினார். அவர் காங்கிரஸில் இருந்து விலகிய சில நாட்களிலேயே, அவரது ஆதரவாளர்கள் பலரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகினர். இதனால் காங்கிரஸ் கட்சி காஷ்மீரில் மிகவும் பலவீனமானது. இதற்கிடையே ஓராண்டிற்குப் பிறகு இப்போது அங்கே கிளைமேட் மாற தொடங்கியுள்ளது. அங்குள்ள பல தலைவர்கள் மீண்டும் காங்கிரஸுக்கு வருகிறார்கள்.
இதற்கிடையே குலாம் நபி ஆசாத்தின் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் 20க்கும் மேற்பட்ட தலைவர்கள் இன்று மல்லிகார்ஜுன் கார்கே முன்னிலையில் மீண்டும் காங்கிரஸில் இணைந்தனர். அப்போத குலாம் நபி ஆசாத்தை காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்தார்.
என்ன பிரச்சினை: ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "காஷ்மீரில் என்ன நிலை என்பதைப் புரிந்து கொள்ளாமல் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்து எதிர்க்கட்சிகள் பேசுவதாக குலாம் நபி ஆசாத் கூறுகிறார். இதுவே அவர் எந்தளவுக்கு மாறிவிட்டார் என்பதைக் காட்டுகிறது.. அவரது ராஜ்யசபா சீட் காலம் முடிந்த போதிலும், டெல்லி அரசு பாங்களாவில் தொடர்ந்து தங்க அவருக்கு அனுமதி தரப்பட்டதும் நம் அனைவருக்கும் தெரியும்..
இன்று காலையில், ஆசாத் கட்சியில் இருந்து 21 தலைவர்கள் மீண்டும் காங்கிரஸில் இணைந்தனர், குலாம் நபி ஆசாத் குறித்து நான் சொன்ன கருத்துக்காக என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தவரும் இப்போது காங்கிரஸில் இணைந்துள்ளார்" என்று அவர் தெரிவித்தார்.

மீண்டும் காங்கிரஸில் இணையம் தலைவர்கள்: குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து மட்டுமின்றி மேலும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கூட மீண்டும் காங்கிரஸில் இணைந்துள்ளனர். காஷ்மீரின் முன்னாள் துணைத் தலைவரான ஹாஜி அப்துல் ரஷீத் தாரும், மீண்டும் ஆசாத் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்துள்ளனர். இது மட்டுமின்றி ஆம் ஆத்மி அப்னி பார்டி என மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பாஜகவில் இணைந்தனர்.
கடந்த சில காலத்திற்கு முன்பு வரை காங்கிரஸில் இருந்து பலரும் விலகி வந்த நிலையில் இப்போது அதில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. குறிப்பாகக் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த வெற்றி என்பது தொண்டர்கள் மட்டுமின்றி நிர்வாகிகள், தலைவர்கள் மத்தியிலும் மிகப் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே உற்சாகத்துடன் அவர்கள் அடுத்து வரும் தேர்தல்களையும் எதிர்கொள்ள ரெடியாகி வருகின்றனர். இந்தச் சூழலில் பலரும் மீண்டும் காங்கிரஸில் இணைவது அவர்களுக்கு பூஸ்டாகவே இருக்கிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications