சுப்ரீம் கோர்ட் உத்தரவால் உத்தவ் அணிக்கு பின்னடைவு.. இனி எல்லாம் ராகுல் நர்வேகர் கையில்.. யார் இவர்?
டெல்லி : மகாராஷ்டிராவில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் குறித்து உரிய காலத்திற்குள் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அனைவரின் கவனமும் சபாநாயகர் மீது திரும்பியுள்ளது. சபாநாயகர் ராகுல் நர்வேகர் பாஜக எம்.எல்.ஏ என்பதால், பாஜக கூட்டணி அரசுக்கு எதிரான முடிவை எடுக்கமாட்டார் என்ற சூழல் நிலவுகிறது.
மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கிளர்ந்து ஷிண்டே ஆட்சியைப் பிடித்த விவகாரத்தில், 16 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளாமல் உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால், அவரை மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்த முடியாது என்று 5 பேர் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. மேலும் நபம் ரெபியா வழக்கு தீர்ப்பை கூடுதல் அமர்வு விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு : உத்தவ் தாக்கரே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால், அவரை மீண்டும் முதல்வர் பதவியில் அமர்த்த உத்தரவிட முடியாது. உட்கட்சி பூசல் காரணமாக ஏற்பட்ட கிளர்ச்சியைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை இழந்து விட்டார் என சபாநாயகர் முடிவு செய்ததில் தவறு செய்துவிட்டார். பெரும்பான்மையை நிரூபிக்க சபாநாயகர் அழைப்பு விடுத்ததற்கு எந்த விதமான காரணங்களும் இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஏக்நாத் ஷிண்டே அணியின் புதிய கொறாடாவாக பாரத் கோகவாலேவை நியமித்தது சட்டவிரோதமானது. விசாரணைக்கு பின்னர் சபாநாயகர் புதிய கொறாடாவை நியமிக்க வேண்டும். எது உண்மையான சிவசேனா கட்சி என்பதை சபாநாயகரே தீர்மானிக்கலாம், அதிருப்தியாளர்கள் மீதான தகுதி நீக்க மனுக்களையும் சபாநாயகரே முடிவு செய்யவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா குழப்பம் : முன்னதாக, கடந்த ஆண்டு மகாராஷ்டிரா முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதைத்தொடர்ந்து கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய அன்றைய துணை சபாநாயகர் நரஹரி ஜிர்வால் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கிடையே ஷிண்டே தரப்பில் துணை சபாநாயகர் நரஹரி ஜிர்வாலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டது.
பல்வேறு ட்விஸ்ட்டுகள் நடந்து, 40 எம்.எல்.ஏக்கள் அதிருப்தி எம்.எல்.ஏக்களாக மாறியதால் மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்து, கடந்த 2022 ஜூன் 30-ஆம் தேதி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது. பின்னர் சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. சபாநாயகர் பதவிக்கு பாஜக சார்பில் ராகுல் நர்வேக்கர், சிவசேனா சார்பில் ராஜன் சால்வி போட்டியிட்டனர். வாக்கெடுப்பில் நர்வேகர் வெற்றி பெற்று சபாநாயகர் ஆனார்.
யார் இந்த நர்வேகர்? : நார்வேகர் முதலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி சிவசேனா கட்சியில் இணைந்த அவர், அக்கட்சியின் எம்எல்ஏவாக இருந்தார். பின்னர் 2014ஆம் ஆண்டில் சிவசேனாவில் இருந்து விலகி பாஜகவில் அஇணைந்தார். தற்போது கொலாபா தொகுதி பாஜக எம்எல்ஏவாக நர்வேக்கர் உள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை குழு தலைவர் ராம்ராஜே நாயக் நிம்பல்கரின் மருமகன் ராகுல் நர்வேகர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொறடா உத்தரவை மீறி கட்சியின் எம்.எல்.ஏக்கள் செயல்பட்டால் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்ற நிலையில், சிவசேனா கட்சியால் முதலில் தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்ட சுனில் பிரபு இருந்தார். அவரது உத்தரவை மீறியதாகவே ஷிண்டே உள்ளிட்ட 16 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கக் கோரிக்கை எழுந்தது. ஆனால், ஷிண்டே அணியின் வேட்பாளரான பாரத் கோகவாலேவை சிவசேனா கட்சியின் புதிய தலைமைக் கொறடாவாக அங்கீகரித்தார் சபாநாயகர் நர்வேக்கர்.
சபாநாயகர் கையில் அதிகாரம் : இந்நிலையில், "தகுதி நீக்க மனுக்கள் மீது சபாநாயகர் நியாயமான காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும்" என மகாராஷ்டிரா எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பளித்துள்ள நிலையில், தற்போது அனைவரது பார்வையும் சபாநாயகர் ராகுல் நர்வேகர் மீது திரும்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக லோக்சபா முன்னாள் செயலாளர் பிடிடி ஆச்சாரி கூறுகையில், "ஷிண்டே கோஷ்டி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வதை தவிர சபாநாயகருக்கு வேறு வழியில்லை. ஏனெனில், உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசியல் கட்சியால், கொறடா உத்தரவு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கொறடா உத்தரவை மீறிய ஷிண்டே பிரிவினரை இது குறிக்கிறது, எனவே இயல்பாகவே அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சபாநாயகர் ராகுல் நர்வேகர் சுற்றுப்பயணமாக லண்டன் சென்றிருப்பதால் அவர் மே 15 அன்றுதான் இந்தியா திரும்பவுள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 16 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளதால், அவர் மீது தற்போது அனைவரின் பார்வையும் பதிந்துள்ளது.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications