யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக தமிழ்நாட்டைத் தொடர்ந்து கேரளா சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றம்!
டெல்லி: மத்திய அரசின் பல்கலைக் கழக மானிய குழு எனப்படும் யுஜிசியின் புதிய விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி கேரளா மாநில சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யுஜிசி விதிகளை திரும்பப் பெறக் கோரி ஏற்கனவே தமிழ்நாடு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களின் சட்டசபைகளிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பிய நிலையில் கேரளா சட்டசபையில் இன்று யுஜிசி விதிகளை திரும்பப் பெறக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பல்கலைக் கழக மானியக் குழு அண்மையில் புதிய வரைவு விதிகளை வெளியிட்டிருந்தது. இந்த வரைவு விதிகள் அனைத்தும் மாநில அரசின் உரிமைகளை பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை ஆளுநர்களே நியமிக்கலாம்; அதுவும் கல்வித் துறை சாராத நபர்களைக் கூட துணைவேந்தர்களாக நியமிக்கலாம் என புதிய யுஜிசி வரைவு விதியில் இடம் பெற்றிருந்தது. துணைவேந்தர்கள் நியமன குழுவில் மாநில அரசின் பிரதிநிதி இடம் பெற்றிருந்ததும் நீக்கப்பட்டிருந்தது.

மத்திய அரசின் இந்த யுஜிசி புதிய வரைவு விதிகளுக்கு எதிராக தமிழ்நாடு சட்டசபையில்தான் முதன் முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களும் தங்களது மாநில சட்டசபைகளில் யுஜிசி விதிகளுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தார்.
அத்துடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருந்தார். அதில், இளநிலை மற்றும் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நடத்துதல் தேவையற்றது; நான்கு ஆண்டு கலை/அறிவியல் இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்களை M.Tech., அல்லது M.E., படிப்புகளைத் தொடர அனுமதிப்பது கவலையளிக்கிறது. அடிப்படை பொறியியல் குறித்த அடித்தளம் இல்லாமல், மாணவர்கள் முதுகலை பொறியியல் படிப்புகளில் சிரமப்படலாம், மேலும் இதுபோன்ற புதிய ஏற்பாட்டிற்கான தேவையைக் குறித்து கவனமாக மறு ஆய்வு செய்யவேண்டும்; Multiple Entrance Multiple Exit (MEME) என்பதும் பல சிக்கல்களை எழுப்புகிறது, குறிப்பாக கற்றல் தொடர்ச்சியில் சீர்குலைவு: தற்போதைய அமைப்பு கற்றலின் ஓட்டத்தை உறுதி செய்கிறது, அதனை MEME சீர்குலைக்கிறது; கல்வியாளர்கள் அல்லாதவர்களை துணைவேந்தர்களாக நியமித்தலுக்கு எதிர்ப்பு உள்ளிட்டவைகளை சுட்டிக்காட்டி இருந்தார்.
மேலும் மாநில பல்கலைக்கழகங்களின் உள்கட்டமைபை மாநில அரசுகள் முழுமையாக ஏற்படுத்தியுள்ளன. இப்பல்கலைக்கழகங்கள் மாநில அரசுகளால் முழுமையாக நிதியுதவி அளிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. மாநிலத்தின் உண்மையான விருப்பங்கள், உள்ளூர் மாணவர்களின் கல்வித் தேவைகள், மாநில கொள்கைகள் ஆகியவை உரிய முறையில் பின்பற்றி உறுதி செய்வதற்கு, துணைவேந்தர்களை தேர்வு செய்யும் நடைமுறையில் மாநில அரசின் பங்கேற்பு மிகவும் முக்கியமானது எனவும் முதல்வர் ஸ்டாலின் அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் வேண்டுகோள் அடிப்படையில் கேரளா மாநில சட்டசபையிலும் யுஜிசியின் வரைவு விதிகளுக்கு எதிராக இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கேரளா சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயன் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார். இதனையடுத்து இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிராக தமிழ்நாட்டைத் தொடர்ந்து 2-வது மாநிலமாக கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications