6 மாநிலம்! துப்பாக்கிச்சூடு முதல் துணை முதல்வர் வீட்டை நொறுக்கியது வரை! அக்னிபாத்தால் நடந்தது என்ன?
டெல்லி: அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்த நிலையில் பீகார், தெலுங்கானா உள்பட 6 மாநிலங்களில் உக்கிரமாக போராட்டங்கள் நடந்தன. ரயில்கள் எரிக்கப்பட்டு ரயில் நிலையங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. குறிப்பாக செகந்திராபாத்தில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியான நிலையில் பீகாரில் பாஜகவை சேர்ந்த துணை முதல்வரின் வீடு சூறையாடப்பட்டது.
ராணுவம், கப்பற்படை, விமானப்படைகளில் குறுகிய கால அதாவது ஆண்டு பணி திட்டமாக அக்னிபாத் திட்டம் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் பாதுகாப்பு துறையில் உள்ள முப்படைகளில் இளைஞர்கள் குறுகிய காலமாக 4 ஆண்டு வரை பணி செய்ய முடியும். அவர்களுக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 வரை சம்பளம் வழங்கப்படும். ஓய்வூதியம் கிடையாது.

இளைஞர்கள் போராட்டம்
இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கொரோனாவால் ஏற்கனவே வேலையில்லாமல் திண்டாடி வரும் இளைஞர்கள் இத்திட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என எதிர்க்கட்சிகளும் குரல் கொடுக்க தொடங்கின. இதனால் நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தனர். நேற்று முன்தினம் பீகாரில் போராட்டம் வெடித்தது.

ரயில்கள்
ஜார்கண்ட், தமிழகம், தெலுங்கானா, தமிழகம் என பல மாநிலங்களிலும் பரவி வருகிறது. குறிப்பாக பீகாரில் இளைஞர்கள் உக்கிரமாக போராட்டம் நடத்துகின்றனர். சாலையில் டயர்களை எரித்து எதிர்ப்பை தெரிவிப்பதோடு, ரயில் நிலையங்களில் மறியல் செய்கின்றனர். நேற்று ரயில்களை தீவைத்து எரித்த சம்பவமும், பாஜக அலுவலகத்துக்கு தீவைத்த சம்பவமும் நடந்தது. இதையடுத்து பல இடங்களில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டு தடியடி நடத்தப்பட்டது. இன்றும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. இதில் முக்கிய 5 பாயிண்டுகள் வருமாறு:

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
* தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் நடந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் இறந்தார். 15 பேர் காயமடைந்தனர். இதேபோல் பீகார், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், அரியானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட இடங்களிலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். சில இடங்களில் போராட்டம் வன்முறையானதால் போலீசார் தடியடி நடத்தி விரட்டியதோடு, கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்படுத்தினர்.

துணை முதல்வரின் வீடு மீது தாக்குதல்
* பீகாரில், மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள பெட்டியா என்ற இடத்தில் அம்மாநில துணை முதல்வர்(பாஜக) ரேணு தேவியின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛இதுபோன்ற வன்முறை சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது. இதனால் ஏற்படும் இழப்புகளை கருத்தில் கொண்டு போராட்டக்காரர்கள் போராட்டத்தை நிறுத்த வேண்டும்'' என்றார்.
* உத்தர பிரதேசம் மாநிலம் பல்லியா ரயில் நிலையத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள் ரயில் பெட்டிக்கு தீவைத்தனர். மேலும் ரயில் நிலையத்தை சூறையாடினர். இதையடுத்து போலீசார் அவர்களை விரட்டியடித்தனர். மேலும் தடிகளை தூக்கி திரிந்த போராட்டக்கார்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

200 ரயில் சேவை பாதிப்பு
* நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடந்த போராட்டத்தின் காரணமாக புதன்கிழமை முதல் மொத்தம் 200 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. 35 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 13 ரயில்களின் சேவை சுருக்கி கொள்ளப்பட்டது.
* இந்த போராட்டத்தின்போது ரயில் நிலையங்கள் தான் சேதப்படுத்தப்பட்டு வருகின்றனர். மேலும் ரயில்களும் எரிக்கப்படுகின்றன. இந்நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், ‛‛ரயில் நிலையம், ரயிலை சேதப்படுத்த வேண்டும். இது இந்தியாவின் சொத்து'' என கோரிக்கை வைத்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications