உளவு துறை "சீக்ரெட்" ரிப்போர்ட்!75ஆவது சுதந்திர தினம்!உச்சக்கட்ட அலர்ட் தேவை! பின்னணியில் பாகிஸ்தான்
டெல்லி: இந்தியாவில் 75ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாட உள்ள நிலையில், உளவுத் துறை முக்கிய எச்சரிக்கையை அனுப்பி உள்ளது.
இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று இந்த ஆண்டு உடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதைக் கொண்டாடக் கோலாகலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
75ஆவது சுதந்திர தின விழாவின் போது பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். இதனால் அங்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாகச் செய்யப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின விழாவை மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவரும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதற்காகச் சட்டத்திலும் கூட தேவையான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. மேலும், தேசியக் கொடியைச் சரியான முறையில் மடிப்பது எப்படி என்பது குறித்த வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டு இருந்தது.

75ஆவது சுதந்திர தின விழா
இந்தச் சூழலில் 75ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களை நாசமாக்கப் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சுதந்திர தினத்தில் லஷ்கர்-இ-தொய்பா (LeT), ஜெய்ஷ்-இ-முகமது (JeM) உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக 10 பக்கங்களைக் கொண்ட விரிவான அறிக்கையை உளவுத் துறை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது.

வார்னிங்
லஷ்கர்-இ-தொய்பா (LeT), ஜெய்ஷ்-இ-முகமது (JeM) மற்றும் சில புதிய பயங்கரவாத அமைப்புகளிடம் அச்சுறுத்தல் இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. மேலும், பிரதமர் மோடி கொடியேற்றும் செங்கோட்டையில் கடுமையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்யுமாறும் டெல்லி காவல்துறைக்கு அறிவுறுத்தி உள்ளது. அதில் ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீதான தாக்குதல் மற்றும் உதய்பூர் மற்றும் அமராவதி சம்பவங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்சக்கட்ட அலர்ட்
பயங்கரவாத தாக்குதல் அபாயம் உள்ளதால் உஷாராக இருக்கும்படி டெல்லி போலீசாருக்கு உளவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. உதய்பூர் மற்றும் அமராவதியில் நடந்த சம்பவங்களைக் குறிப்பிட்டு, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு கேட்டுக் கொண்டு உள்ளது. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஜெய்ஷ் மற்றும் லஷ்கர் பயங்கரவாதிகள் மூலம் தாக்குதலைத் தூண்டி வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

ஆளில்லா விமானம்
முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப் பயங்கரவாதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது. குறிப்பாக, UAV எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு அதிகம் என்றும் எல்லையில் பாதுகாப்புப் படை வீரர்கள் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Recommended Video

வெடிகுண்டு
டெல்லியில் ரோஹிங்கியாக்கள், ஆப்கானிஸ்தான் தேசிய சூடான் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளன. மேலும், டிபன் வெடிகுண்டு, விவிஐஇடி போன்ற வெடிகுண்டுகளைச் சமாளிக்கத் தயார் நிலையில் இருக்குமாறும் போலீசாருக்கு உறவு துறை அறிவுறுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications