Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அவ்வளவுதானா? லோக்சபா தேர்தலுக்கு முன் மோடியை அலறவிடும் 2 பெரிய பிரச்சனைகள்! இப்படியா சிக்கல் வரும்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்தபட்சம் ரூ.200ம், அதிகபட்சமாக ரூ.400 வரையும் குறைக்க மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இது நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமயிலான மத்திய அரசுக்கு ஓட்டுக்களை பெற்று கொடுக்கலாம் எனும் நிலையில் தான் பிற 2 பெரிய சவால்கள் எழுந்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

கொரோனா பரவலுக்கு பிறகு ஒட்டுமொத்த உலக நாடுகளும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க தொடங்கி உள்ளன. குறிப்பாக பொருளாதார வளர்ச்சி என்பது பல நாடுகளில் தடைப்பட்டுள்ளது. இலங்கை உள்பட பல சிறிய நாடுகள் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளன. இருப்பினும் பிற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியா பொருளாதார நெருக்கடியை திறம்பட சமாளித்துள்ளது.

Ahead of Parliamenet Election How will El Nino and Food Inflation may challenge for PM Modis Union Government?

பல நாடுகளில் உணவு பொருட்களின் விலை என்பது பலமடங்கு அதிகரித்தது. மேலும் பல அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை தொட்டன. இந்தியாவிலும் சில உணவு பொருட்களின் விலைகள் அதிகரித்தன. இத்தகைய சூழலில் தான் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பாஜக, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்பதால் மத்திய அரசு சார்பில் புதிய அறிவிப்புகள் வரலாம் என கூறப்படுகிறது. இதன் ஒருபகுதியாக தான் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு குறித்த அறிவிப்பை அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றன.

அதாவது பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.200 குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சிலிண்டர் விலையில் 400 ரூபாய் குறைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து குடும்பங்களும் பயன்பெற உள்ளனர். ரக்சா பந்தனையொட்டி பெண்களுக்கு பரிசாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாக பிரதமர் மோடி கூறினாலும் கூட பின்னணியில் நாடாளுமன்ற தேர்தல் தான் உள்ளதாக கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில் தான் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முன்பு 2 மிகப்பெரிய சவால்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் ஒன்று எல்- நினோ. மற்றொன்று உணவு பணவீக்கம். இந்த 2 விஷயங்களை மத்திய அரசு சமாளிப்பது என்பது மிகவும் எளிதானதாக இல்லாத பட்சத்தில் அது நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. இதனால் இந்த பிரச்சனைகளை மத்திய அரசு எப்படி சமாளிக்க போகிறது என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. மேலும் இந்த எல் - நினோ மற்றும் உணவு பணவீக்கம் என்றால் என்ன? அது தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றிய விபரம் வருமாறு:

எல்-நினோ என்பது (El -nino) என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் ஏற்படும் வெப்ப மாற்றத்தை குறிக்கும். குறிப்பிட்ட காலத்தில் இந்த வெப்பநிலை என்பது அதிகரிக்கும். இத்தகைய வெப்ப உயர்வை தான் எல் - நினோ என அழைப்பார்கள். இந்ந வெப்ப உயர்வு என்பது இந்தியாவில் மழையை குறைக்கும். தற்போது இந்த வெப்பநிலை உயர்வால் இந்தியாவில் ஆகஸ்டில் இதுவரை இயல்பை விட குறைவாக 30.7 சதவீதம் வரை மழை சரிந்துள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் 27 ம் தேதியின் அடிப்படையில் பார்த்தால் தென்மேற்கு பருவமழை என்பது 7.6 சதவீதம் வரை குறைந்துள்ளது.

மேலும் வரும் நாட்களிலும் மழை என்பது பெரிதாக பெய்ய வாய்ப்பில்லை. இதனால் ஆகஸ்ட் மாதம் என்பது 1965 மற்றும் 1920ம் ஆண்டை விட மழை குறைந்து வறண்டதாக மாறலாம் என கூறப்படுகிறது. மேலும் பசிபிக் பகுதியில் கடல் மேற்பரப்பு வெப்பநிலையை அளவீடும் ஓசியானிக் நினோ இன்டெக்ஸ் (ONI) என்பது 1 டிகிரியை தொட்டுள்ள நிலையில் அக்டோபர், டிசம்பரில் 1.5 டிகிரி செல்சியஸை தாண்டலாம் என கூறப்படுகிறது. அதோடு 2024 ஜனவரி முதல் மார்ச் மாதங்களில் சற்று குறைந்து 1 டிகிரிக்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது.

இதனால் தென்மேற்கு பருவழை மட்டுமின்றி, அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் பொழியும் வடகிழக்கு பருவமழையையும் குறைக்கும். இதனால் பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை, விவசாயம் என்பது பெரிதும் பாதிக்கப்படும். குறிப்பாக ராபி பயிர்களான கோதுமை, கடுகு, கொண்டைகடலை, உருளை, வெங்காயம், கொத்தமல்லி, பெருஞ்சீரகம் உள்ளிட்டவற்றின் உற்பத்தி பாதிக்கப்படும். இதனால் விலை உயரும். விலை உயரும் பட்சத்தில் மத்திய அரசு பெரிய சிக்கலை சந்திக்கலாம்.

மேலும் தற்போது கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா உள்பட பல மாநில அணைகளின் நீர்மட்டம் என்பது குறைந்துள்ளது. இங்கு மழை அளவு என்பது சராசரியை விட குறைந்துள்ளது. ஆகஸ்ட் 1ம் தேதி அரசு கிடங்குகளில் அரிசி மற்றும் கோதுமை கையிருப்பு 65.5 மில்லியன் டன்கள் (எம்டி) ஆகும். இது கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது. மேலும் உணவு பொருட்கள் மீதான சில்லரை பணவீக்கம் 7 சதவீதத்தை கடந்து இருப்பது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இது உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும்.

இல்லாவிட்டால் தக்காளி, வெங்காயம் விலை உயர்வை போல் அரிசி, கோதுமையின் விலையும் விண்ணை முட்டலாம். மேலும் கோதுமை, அரிசி உள்ளிட்டவற்றின் கையிருப்பு குறையும் போது இது பிற பொருட்களின் மீதான நாட்டத்தை அதிகரிக்கும். அப்படி இருக்கும் சூழலில் கோதுமை, அரிசி உள்பட பிற பொருட்களின் மீதும் உணவு பணவீக்கம் ஏற்படும் அச்சம் உருவாகி உள்ளது.

இதனால் தான் மத்திய அரசு கோதுமை ஏற்றுமதியை தடை செய்துள்ளது. மேலும் சர்க்கரை ஏற்றுமதி என்பது இலவசம் என்ற நிலையில் இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டது. மே 2023க்குப் பிறகு எந்த ஏற்றுமதியும் நடைபெறவில்லை. மேலும் கடந்த ஆண்டு செப்டம்பரில் அரிசி ஏற்றுமதியும் தடை செய்யப்பட்டது. பாஸ்மதி அல்லாத பிற அரிசிகளின் ஏற்றுமதிக்கு 20 சதவீத வரி விதிக்கப்பட்டது. அதன்பிறகு 2023 ஜூலை 20ல் பாஸ்மதி அல்லாத அரிசியின் ஏற்றுமதிக்கும் தடை நீட்டிக்கப்பட்டது.

மேலும் ஜூன்ல 2ல் மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு பருப்பை நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக வைக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதோடு கடந்த ஜூன் 12ல் கோதுமை கையிருப்புக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதோடு, ஆகஸ்ட் 19 ல் வெங்காயம் ஏற்றுமதிக்கு 40 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. மேலும் வரும் நாட்களில் பருவமழை குறைவால் இன்னும் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் மத்திய அரசு அதிக விழிப்புடன் செயல்பட வேண்டிய சூழலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+