நாடாளுமன்ற கூட்டம்.. டெல்லியில் துவங்கிய அனைத்துக்கட்சி கூட்டம்! திமுக, அதிமுக எம்பிக்கள் பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடங்கி 19 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தான் குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக இன்று டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த செப்டம்பர் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்றது. இந்த கூட்டத்தொடரில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Ahead of Parliament Monsoon Session all party meeting to be held today

அதன்பிறகு பழைய கட்டடத்தில் இருந்து புதிய கட்டடத்துக்கு நாடாளுமன்றத்தில் இரு சபைகளும் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் விவாதங்கள் நடந்தது. அதன்பிறகு நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 4ம் தேதி தொடங்கும் என மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்து இருந்தார். இந்த கூட்டத்தொடர் மொத்தம் 19 நாட்கள் நடைபெற உள்ளது. டிசம்பர் 22ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.

மொத்தம் 15 அமர்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 37 மசோதாக்கள் நிலுவையில் உள்ள நிலையில் அதில் 12 மசோதாக்களை நிறைவேற்றவும், 6 மசோதாக்களை அறிமுகம் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி காலனித்துவ கால குற்ற சட்டங்களுக்கான 3 சட்டங்களான இந்திய தண்டணை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் சாட்சியச் சட்டம் பெயர் மாற்றம் உள்ளிட்ட பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த மசோதாக்களை நிறைவேற்றம் செய்ய வேண்டும் என்றால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் அமைதியாக நடைபெற வேண்டும். அதோடு எதிர்க்கட்சிகளின் ஆதரவு என்பதும் தேவை. இதனால் தான் நாடாளுமன்ற மழைக்கால தொடரை சுமுகமாக நடத்துவதற்கு ஆதரவு கேட்டு இன்று டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை 11.30 மணிக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் நாடாளுமன்றத்தின் நூலக கட்டிடத்தில் கூட்டம் தொடங்கியது. இதில் காங்கிரஸ், திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் திமுக சார்பில் வில்சன் எம்பி அதிமுக சார்பில் தம்பித்துரை, ரவீந்திரநாத் எம்பி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டம் சுமார் 2 மணிநேரம் வரை நடைபெறும் என கூறப்படுகிறது. கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை சுமூகமாக நடத்தவும், மசோதாக்களை நிறைவேற்ற ஆதரவு தரும்படியும் மத்திய ்அரசு சார்பில் அனைத்து கட்சியினருக்கும் கோரிக்கை வைக்கப்பட உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+