அகமதாபாத் விமான விபத்துக்கு காரணம் இதுதான்.. வெளியானது முதற்கட்ட விசாரணை அறிக்கை
டெல்லி: 260 பேரின் உயிரை கொன்ற அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது விசாரணை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி விமானம் டேக் ஆஃப் ஆன பின்னர், என்ஜின்களுக்கு செல்லும் எரிபொருள் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது.
விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (ஏஏஐபி) வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, "விமானம் 08:08:42 UTC மணியளவில் மணிக்கு 180 நாட்ஸ் IAS என்ற அதிகபட்ச பதிவு செய்யப்பட்ட வேகத்தை அடைந்தது. உடனடியாக, எஞ்சின் 1 மற்றும் எஞ்சின் 2 எரிபொருள் கட்ஆஃப் சுவிட்சுகள் ஒரு வினாடி இடைவெளியில் 'RUN' நிலையிலிருந்து 'CUTOFF' நிலைக்கு மாறின. என்ஜின்களுக்கு எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டதால், எஞ்சின் N1 மற்றும் N2 அவற்றின் டேக்-ஆஃப் மதிப்புகளிலிருந்து குறையத் தொடங்கின.

காக்பிட் குரல் பதிவில், ஒரு விமானி மற்றொரு விமானியிடம் ஏன் கட்ஆஃப் செய்தார் என்று கேட்கிறார். அதற்கு மற்றொரு விமானி தான் அதைச் செய்யவில்லை என்று பதிலளித்தார்.
விமான நிலையத்திலிருந்து பெறப்பட்ட CCTV காட்சிகளில், விமானம் புறப்பட்ட உடனேயே (ஆரம்பக்கட்ட டேக் ஆஃப் போது) ராம் ஏர் டர்பைன் (RAT) விரிவடைந்தது தெரியவந்துள்ளது. விமானத்தின் பாதைக்கு அருகில் குறிப்பிடத்தக்க பறவைகளின் நடமாட்டம் எதுவும் காணப்படவில்லை. விமானம் விமான நிலையத்தின் சுற்றுச்சுவரைக் கடக்கும் முன்பே உயரத்தை இழக்கத் தொடங்கியது" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications