அதிமுக, பாமகவுக்கு ஷாக்.. அதிக நன்கொடை பெற்ற மாநில கட்சி இதுதான்.. யாரு பாருங்க.. சாதித்த தமிழகம்
டெல்லி: 2021-2022 நிதியாண்டில் 26 மாநில கட்சிகளுக்கு மொத்த நன்கொடையாக ரூ.189 கோடி கிடைத்துள்ளது. இதில் அதிக நன்கொடை பெற்ற மாநில கட்சிகளில் டாப்பில் உள்ள கட்சிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. மேலும் அதிமுக, பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பான விபரம் ஷாக் அளிக்கும் வகையில் உள்ளதோடு, தமிழகத்தில் தான் ரொக்கமாக அதிக பணம் நன்கொடையாக கைமாறி இருப்பதும் தெரியவந்துள்ளது. இதுபற்றிய முழுவிபரம் வருமாறு:
இந்தியாவில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் கல்வி தகுதி, நிலுவை வழக்குகள், சொத்து மதிப்பு உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஏடிஆர் எனும் ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் விபரங்களை சேகரித்து அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய விபரங்களை அந்த சங்கம் வெளியிட்டுள்ளது.

அதாவது அரசியல் கட்சிகள் ஒவ்வொரு நிதியாண்டிலும் தாங்கள் பெற்ற நன்கொடை விபரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அந்த வகையில 2021-2022ம் நிதியாண்டுக்கான விபரங்களை கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைத்தன. இதுதொடர்பான விபரங்களை தான் ஏடிஆர் தற்போது வெளியிட்டுள்ளது.
ரூ.189.80 கோடி: அதன்படி 2021-2022 நிதிஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட 26 அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விபரங்கள் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி 2021-2022 நிதியாண்டில் 26 அரசியல் கட்சிகளும் மொத்தம் 5,100 நன்கொடையாளர்களிடம் இருந்து ரூ.189 கோடியே 80 லட்சம் நன்கொடை பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5 மாநில கட்சிகளுக்கு மட்டும் ரூ.162 கோடியே 21 லட்சம் (85.46 சதவீதம்) நன்கொடையாக கிடைத்துள்ளது.
முதலிடம் யாருக்கு: அதன்படி இந்த பட்டியலில் அதிக நன்கொடை பெற்ற கட்சியாக முதலிடத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் பாரத் ராஷ்ட்ரிய சமீதி உள்ளது. இந்த கட்சிக்கு 14 நன்கொடையாளர்களிடம் இருந்து ரூ.40 கோடியே 90 லட்சம் நன்கொடையாக கிடைத்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் ஆம் ஆத்மி(கடந்த ஆண்டு மாநில கட்சி. தற்போது தேசியக்கட்சி) ரூ.38 கோடியே 24 லட்சம் பெற்றுள்ளது. ஆம்ஆத்மி இந்த நன்கொடையை 2,619 நன்கொடையாளர்கள் வழங்கி உள்ளனர். ஆம் ஆத்மிக்கு வெளிநாட்டில் இருந்து ரூ.1 கோடியே 82 லட்சம் நன்கொடை கிடைத்துள்ளது.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்: பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் ரூ.33 கோடியே 26 லட்சம் பெற்று 3 வது இடத்தில் உள்ளது. 4வது இடத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி இருக்கிறது. இந்த கட்சி ரூ.29 கோடியே 80 லட்சம் நன்கொடை பெற்றுள்ளது. 5வது இடத்தில் ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி உள்ள நிலையில் அது ரூ.20 கோடியை நன்கொடையாக பெற்றுள்ளது.
அதிமுக, பாமக பூஜ்ஜியம்: மாறாக அதிமுக, பிஜு ஜனதாதளம், நாகாலாந்து ஜனநாயக முற்போக்கு கட்சி, சிக்கிம் ஜனநாயக முன்னணி, பாமக, தேசிய மாநாட்டு கட்சி ஆகிய கட்சிகள் நன்கொடை பெறவில்லை என்று கூறியுள்ளன. இதன்மூலம் அதிமுக, பாமக கட்சிகள் முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது பெற்ற நன்கொடையில் 100 சதவீதம் சரிந்துள்ளன. 2020-2021ல் நன்கொடை பெறாத தேமுதிக, ராஷ்டிரீய லோக்தந்திரிக் கட்சி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உள்ளிட்டவை 2021-2022 நிதியாண்டில் நன்கொடை பெற்றதாக தெரிவித்துள்ளன. விஜயகாந்தின் தேமுதிக ரூ.50 ஆயிரம் பெற்றதாக கூறியுள்ளது.
தமிழகத்தில் அதிகம்: இந்த நிதியாண்டில் 26 மாநில கட்சிகளுக்கு ரூ.189 கோடியே 80 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. இதில் ரொக்கமாக ரூ.7 லட்சத்து 40 ஆயிரம் வரை பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதிகபட்சமாக ரூ.5 லட்சத்து 50 ஆயிரத்தை ரொக்கமாக பெற்றுள்ளது. அதோடு தமிழ்நாட்டில் இருந்துதான் அதிக அளவில் ரொக்கமாக ரூ.5 லட்சத்து 50 ஆயிரம் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications