அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி.. தேர்தல் ஆணைய அங்கீகாரத்துக்கு எதிரான வழக்கில் நோட்டீஸ்!
டெல்லி: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் தம்மை அங்கீகரிக்கவில்லை என டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கூடாது என ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அதாவது தேர்தல் ஆணையம், எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக ஏற்றது. இதனால் அதிமுக எடப்பாடி பழனிசாமி வசமானது. அதிமுகவின் இரட்டை இலை சின்னமும் எடப்பாடி வசமானது.

தற்போது எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டுள்ளது. அதிமுகவின் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி ஆகியோர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கில் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் ஆணையம் 6 வார காலத்தில் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.












Click it and Unblock the Notifications