கடவுள் பெயர் சொல்லி பதவியேற்ற சிவி சண்முகம்.. இளையராஜா எங்கே? திரும்பி பார்த்த வெங்கையா நாயுடு
டெல்லி: நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் மாநிலங்களவையின் புதிய உறுப்பினர்களாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இதில் அதிமுக எம்.பி சி.வி சண்முகம் மட்டும் கடவுளின் பெயரில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.
தமிழ்நாட்டில் காலியாக இருந்த 6 மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் நாடு முழுவதும் காலியாக இருந்த 57 எம்.பி பதவிகளுக்கான தேர்தல் கடந்த ஜூன் 10ம் தேதி நடந்தது.
இதில் திமுக சார்பில் தஞ்சை கல்யாணசுந்தரம், கேஆர்என். ராஜேஷ்குமார், ரா.கிரிராஜன் ஆகியோர் புதிய மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வாகினர்.

கடவுளின் பெயர்?
அதேபோல அதிமுகவிலிருந்து அக்கட்சியின் முன்னாள் அமைச்சரான சி.வி.சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, இவர்கள் இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர். இதில் திமுக எம்.பிக்கள் "சட்டத்தினால் நிறுவப்பட்டிருக்கக்கூடிய இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது உண்மையான பற்றும் பற்று உறுதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாக பற்றி நிற்பேன்.

சி.வி சண்முகம்
நான் இப்போது ஏற்று இருக்கும் கடமையை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் விழுமிய முறையுடன் உறுதி கூறுகிறேன்" என பொறுப்பேற்றுக்கொண்டனர். இதனையடுத்து வந்த அதிமுக எம்.பி சி.வி சண்முகம், மேற்குறிப்பிட்டவற்றைக் கூறி இறுதியாக கடவுளின் பெயரில் உறுதி கூறுகிறேன் என்று பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே போல நியமன எம்பிக்களாக நியமிக்கப்பட்ட இளையராஜா மற்றும் பி.டி.உஷா ஆகியோரும் இன்று பதவியேற்க வரவில்லை.

குடியரசுத் தலைவர்
நாடாளுமன்றத்தின் முதல் நாளிலேயே இளையராஜா, பி.டி.உஷா ஆப்சென்ட் ஆகியிருந்ததால் சபாநாயகர் வெங்கையா நாயுடு அவர்கள் பெயரை உச்சரித்து விட்டு திரும்பி பார்த்து ஏமாற்றமடைந்தார். நியமன எம்.பி நடைமுறையானது 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி இந்திய அரசியலமைப்பின் நான்காவது அட்டவணையின்படி, மாநிலங்களவையில் 216 உறுப்பினர்களைக் கொண்டிருக்க வேண்டும், அதில் 12 உறுப்பினர்கள் குடியரசு தலைவரால் பரிந்துரைக்கப்பட வேண்டும், மீதமுள்ள 204 பேர், மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இளையராஜா
அந்த 12 பேரை நியமன உறுப்பினர்களாக நியமிக்கும் மரபு இப்போதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
இருப்பினும், தற்போதைய பலமான 245 உறுப்பினர்களில் 233 பேர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள். 12 பேர் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுபவர்கள். மாநிலங்களவையை மக்களவை போல பெரும்பான்மை பலம் இல்லை என்று கூறி கலைத்து விட முடியாது. அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஒவ்வோர் இரண்டாவது வருடமும் ஓய்வு பெறுகின்றனர்.

6 வருடம்
மக்களவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முழு பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். ஆனால், மாநிலங்களவையில் ஒருவர் எம்.பி பதவி ஏற்றுக் கொண்ட நாளில் இருந்து ஆறு வருடங்களுக்கு அந்தப் பதவியில் இருக்க முடியும். இடையில் மக்களவை கலைக்கப்பட்டாலும் மாநிலங்களவை அப்படியே தொடரும்.












Click it and Unblock the Notifications