கொரோனா 'ஆர் எண் வேல்யூ' அதிகரிப்பு.. கட்டுப்பாடு இல்லைனா நிலைமை மோசமாகும்.. எய்ம்ஸ் தலைவர் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் 'ஆர் எண் வேல்யூ' தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும் இது மிகவும் கவலையளிக்கும் விஷயம் என்றும் எய்ம்ஸ் தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஆர் எண் மதிப்பு என்பது கொரோனா வைரஸை மதிப்பிடுவதற்கான ஒரு வழி அல்லது நோயை பரப்பும் திறனை குறிப்பது ஆகும். அதாவது ஒரு நபரால் எத்தனை பேருக்கு நோய் பரப்பபடுகிறது என்பதை வைத்து இது மதிப்பிப்படுகிறது.

இந்தியாவில் சில நாட்கள் ஓய்வெடுத்த கொரோனா மீண்டும் அதிகரித்துள்ளது. கேரளாவில் கொரோனாவின் உச்சம் நிகழ்ந்து வருகிறது. மேலும், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவிலும் தொற்று அதிகரித்துள்ளது.

ஆர் எண் வேல்யூ அதிகம்

ஆர் எண் வேல்யூ அதிகம்

நாட்டின் நாற்பத்தாறு மாவட்டங்கள் 10 சதவீதத்திற்கும் அதிகமான தொற்று பாஸிடிவ் ரேட் விகிதத்தை கொண்டுள்ளதாக மத்திய அரசு நேற்று தெரிவித்து இருந்தது. இந்த நிலையில்தான் 'ஆர் எண் வேல்யூ' அதிகரித்துள்ளதாக டாக்டர் ரன்தீப் குலேரியா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

பரிமாற்ற சங்கிலியை உடைக்கணும்

பரிமாற்ற சங்கிலியை உடைக்கணும்

ஆர் என் மதிப்பு 0.96 இல் தொடங்கி 1 வரைஉயர்ந்திருப்பது கவலைக்குரியது. எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் கொரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்பு ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு எளிதாக இருக்கிறது. ஆர் என் மதிப்பு எழுச்சி காணும் பகுதிகளில் தீவிர கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வேண்டும்.சோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சை என்னும் மூன்று நடவடிக்கை மூலம் கொரோனா பரிமாற்ற சங்கிலியை உடைக்க வேண்டும் என்று ரன்தீப் குலேரியா கூறினார்.

சிக்கன் பாக்ஸ் போல தான்

சிக்கன் பாக்ஸ் போல தான்

டெல்டா வைரஸ் மாறுபாடு மற்ற மாறுபாடுகளை விட கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி 'சிக்கன் பாக்ஸ்' நோய் போல எளிதில் பரவும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த ரன்தீப் குலேரியா, 'தட்டம்மை அல்லது சிக்கன் பாக்ஸ் நோயில் 8 அல்லது அதற்கு மேற்பட்ட ஆர் என் மதிப்பு இருந்தது. அதாவது ஒரு நபர் மூலம் எட்டு பேருக்கு தொற்று ஏற்படலாம்.

கேரளாவில் அதிகரிப்பு

கேரளாவில் அதிகரிப்பு

தற்போது இருக்கும் கொரோனா வைரஸும் சிக்கன் பாக்ஸ் போல தான் பரவுகிறது. இந்தியாவில் கொரோனா 2-வது அலையில் ஒட்டுமொத்த குடும்பங்களும் பாதிக்கப்படதை நாம் கண்கூடாக பார்த்தோம். அப்போது ஆர் என் மதிப்பு சிக்கன் பாக்ஸ் நோயை ஒத்து இருந்தது என்று அவர் கூறினார். மேலும் ரன்தீப் குலேரியா கூறுகையில், 'கேரளாவிலிருந்து அதிக எண்ணிக்கையிலான புதிய பாதிப்புகள் வருவதால், நோய்த்தொற்றுகள் அதிகரிப்பதை கட்டுப்படுத்த வேண்டும்.

Recommended Video

    கொரோனா மீண்டும் அதிகரிப்பது ஏன் | Dr. Shanthi Ravindranath Explain | Oneindia Tamil
    புதிய வைரஸ் மாறுபாடு

    புதிய வைரஸ் மாறுபாடு

    ஆரம்பத்தில் தொற்றுநோயை நன்கு நிர்வகிப்பதன் மூலம் கேரளா மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தது. ஆனால் இப்போது அதிக அளவிலான பாதிப்பு ஏற்படுகிறது. இதை மதிப்பீடு செய்ய வேண்டும். இந்த எழுச்சிக்கு பின்னால் ஒரு வைரஸ் மாறுபாடு உள்ளதா? கேரளாவில் கட்டுப்பாட்டு நடைமுறைகள் தீவிரமாக பின்பற்றப்படுகிறதா? என்பவை மதிப்பீடு செய்யப்பட வேண்டும். கேரளா அருகில் இருக்கும் கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களும் பரிமாற்ற சங்கிலியை உடைக்க தீவிர கட்டுப்பாடு நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

    தமிழ்நாட்டில் 66 சதவிகித மக்கள்

    தமிழ்நாட்டில் 66 சதவிகித மக்கள்

    தமிழ்நாட்டில் 66 சதவிகித மக்கள் ஆன்டிபாடிகளை கொண்டுள்ளனர் என்று செரோ சர்வே கூறுகிறது இருப்பினும் தமிழ்நாட்டில் பாதிப்பு ஏற்றம் கண்டு வருகிறது. பிரேசிலில் இதேபோல் ஒரு மாகாணத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 70 சதவிகித மக்களுக்கு ஆன்டிபாடிகள் இருப்பதைக் காட்டியது. ஆனாலும் அங்கு ஒரு பெரிய கொரோனா எழுச்சி காணப்பட்டது. ஆகையால் செரோ சர்வேயை வைத்து எளிதில் கணித்து விட முடியாது என்று ரன்தீப் குலேரியா கூறினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+