துணை முதல்வர் பதவி இல்லை.. திருமாவளவனுக்கு தவெக கொடுத்த பெரிய ஆபர்
சென்னை: சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி கட்சி உதவிகளுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. கம்யூனிஸ்ட்கள், விசிக, ஐயுஎம்எல் ஆகியோர் வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியுள்ளனர். காங்கிரஸ், அதிமுகவின் வேலுமணி அணியும் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறபோகிறது. இதேபோல விசிகவும் அமைச்சரவையில் இடம்பெற தவெக அழைப்பு விடுத்துள்ளது. விசிக துணை முதல்வர் பதவி கேட்க, தவெக அது முடியாது என்று சொல்லி திருமாவளவனுக்கு வேறு ஆபரை வழங்கியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி விசிக தலைவர் திருமாவளவன் அளித்த நேர்காணலில் கூறுகையில், "எங்கள் கட்சியின் நிர்வாகிகள் பொதுச்செயலாளர் ரவிக்குமார் தவெகவுடனான பேச்சுவார்த்தையின்போது, நாங்கள் நிச்சயம் அமைச்சரவையில் இடம்பெறுவோம். எங்கள் தலைவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பேசியது உண்மை. அது என் கவனத்திற்கும் வந்தது. தவெகவை வெளியில் இருந்து ஆதரிப்பது என்கிற முடிவில் உறுதியாக இருப்போம் என்று கூறி ஆதரவு தெரிவித்தோம்.

தவெக ஆட்சிக்கு ஆபத்தா
அதன் பிறகும் கூட, கட்சியில் இரண்டு எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்கள் இருவரையுமோ அல்லது அதில் ஒருவரை அமைச்சரவையில் இடம்பெற வைக்க வேண்டும். முக்கியமாக நான் உள்ளே வரவேண்டும் என்ற கருத்துகளை எங்கள் தோழர்கள் முன் வைத்துள்ளனர். எனக்கு துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்தும் எங்கள் நிர்வாகிகள் பேசினர். ஆனால் துணை முதல்வர் பதவியே நாங்கள் உருவாக்க போவதில்லை என்று தவெகவினர் கூறியுள்ளனர்.
உங்கள் தலைவர் மூத்த அரசியல் தலைவர். அவர் உள்ளே வந்தால் அவருக்குரிய மரியாதையை நாங்கள் வழங்குவோம் என்ற அவர்கள் உறுதியளித்துள்ளனர். சட்டமன்றத்தில் தவெக பெரும்பான்மையை நிருபித்துவிட்டனர். இதில் எந்த சிக்கலும் வரப்போவதில்லை. அதிமுகவில் 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். சபாநாயகர் எடுப்பது தான் இறுதியான முடிவு. அதில் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வரப்போவதில்லை.
விசிக மறுபரிசீலனை
உச்ச நீதிமன்றம் சென்று அந்த 25 பேரின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டால் அங்கு இடைத்தேர்தல் நடக்கும். அவர்கள் அதிமுக சின்னத்தில் நிற்பார்களா, தவெக சின்னத்தில் நிற்பார்களா என்பது தெரியவில்லை. பொருளாதார நெருக்கடி, பாஜகவின் நெருக்கடி ஆகியவற்றை எப்படி எதிர்கொள்ள போகிறார்கள், அதிமுகவை அமைச்சரவையில் இடம்பெறவைத்தால் இடதுசாரிகளை எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்று தெரியவில்லை.
அதிமுகவினரை தவெக அமைச்சரவையில் இடம்பெற வைப்பதற்கு விசிக எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். அது தவறும் அப்படி ஒரு சூழல் வந்தால் தவெகவுக்கு கொடுத்த ஆதரவை விசிகவும் மறுபரிசீலனை செய்வோம். ஆனால் அதிமுகவின் ஆதரவு உறுதிபடுத்தப்பட்டால் தவெகவுக்கு விசிகவின் ஆதரவு தேவைப்படாமல் போகலாம். ஆனால் உடனடியாக கூட்டணி மாறுவதில் எங்களுக்கும் ஒரு நெருடல் இருக்கிறது. அதனால் தான் வெளியில் இருந்து ஆதரிக்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications