லேசான கொரோனா பாதிப்பு.. 10நாள் தனிமை போதும்.. மீண்டும் சோதனை தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குநர் விளக்கம்
டெல்லி: லேசான கொரோனா பாதிப்பு உடையவர்களுக்கும் அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகளுக்கும் 8ஆவது நாளில் கொரோனா வைரஸ் இறந்துவிடுவதால் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் அலையில் வைரஸ் பாதிப்பு மிக மிக மோசமாக உள்ளது.
உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் ஒரே நேரத்தில் நான்கு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

வீட்டில் சிகிச்சை
இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் 32 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களில் 15% மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதமுள்ள 85% பேருக்கு லேசான கொரோனா பாதிப்பு மட்டுமே இருப்பதால், அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதிய வழிகாட்டுதல்கள்
இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்பவர்களுக்கு புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் லேசான மற்றும் அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகள் 10 நாட்கள் வரை தனிமையில் இருந்தால் போதும். அதன் பின்னர், மூன்று நாட்களுக்கு அவர்களுக்குக் காய்ச்சல் இல்லையென்றால், தனிமைப்படுத்தும் காலம் முடிந்துவிட்டது என பொருள். அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளத் தேவையில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

சந்தேகம்
மத்திய அரசின் இந்தப் புதிய வழிகாட்டுதல்களைப் பலரும் சந்தேகத்துடனேயே அணுகினர். நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், அதைக் குறைத்துக் காட்ட வேண்டும் என்பதற்காகவே தனிமைப்படுத்தும் காலத்திற்குப் பிறகு, கொரோனா பரிசோதனை தேவையில்லை என அரசு அறிவித்துள்ளதாகப் பலரும் குற்றஞ்சாட்டினர். மேலும், பரிசோதனை இல்லாமல் ஒருவருக்கு கொரோனா இல்லை என உறுதியாக எப்படிக் கூற முடியும் என்றும் கேள்வி எழுப்பினர்.

காரணம் என்ன
இந்நிலையில், இது குறித்து எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா விளக்கம் அளித்துள்ளார். அதாவது லேசான கொரோனா பாதிப்பு உடையவர்களுக்கும் அறிகுறிகள் இல்லாத கொரோனா நோயாளிகளுக்கும் உடலில் இருக்கும் கொரோனா வைரஸ் 8ஆவது நாளில் கொரோனா இறந்துவிடும். இதனால் அவை மற்றவர்களுக்குப் பரவாது. அதேநேரம் அவர்களின் உடலில் சில காலம் அந்த உயிரிழந்த கொரோனா வைரஸ் இருக்கும். ஆர்டி பிசிஆர் சோதனைகளில் இதன் காரணமாக அவர்களுக்கு கொரோனா பாசிடிவ் என முடிவுகள் வரும். அதாவது கொரோனாவில் இருந்து அவர்கள் குணமடைந்த பின்னரும் கொரோனா இருப்பதாக முடிவுகள் வரும் என அவர் தெரிவித்தார்.

கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்புகளில் சுமார் 85% லேசான பாதிப்புகளாகவே இருக்கும். அவர்களுக்கு எவ்வித கூடுதல் சிகிச்சையும் தேவைப்படாது. ஒரு வாரத்தில் தானாக கொரோனாவில் இருந்து குணமடைந்துவிடுவார்கள். மீதமுள்ளவர்களில் 10% நுரையீரல் பாதிப்பு ஏற்படும். அவர்களுக்கு சில நாட்கள் ஆக்சிஜன் உதவி தேவைப்படும், எஞ்சிய 5% கொரோனா பாதிப்பு தீவிரமாக இருப்பதால் நுரையீரல் மோசமாகப் பாதிக்கப்படும். அவர்களுக்கு சில வாரங்கள் வரை ஆக்சிஜன் உதவி தேவைப்படலாம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications