ஆக்சிஜன் தட்டுப்பாடு : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடல்
ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
டெல்லி: கொரோனா நோயாளிகள் அதிகரித்துள்ள நிலையில் புதிய ஆக்ஸிஜன் குழாய்கள் அமைப்பதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக் குறை ஏற்படாமல் தடுக்க புதிய ஆக்ஸிஜன் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதன் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் ஐசியு சிறிது நேரம் மூடப்பட்டது. புதிய ஆக்சிஜன் குழாய்கள் அமைக்கும் பணிகள் முடிந்த பிறகு, அவசர சிகிச்சை பிரிவு மீண்டும் திறக்கப்பட்டது.
தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் சென்றுள்ளது. பெரும்பாலான மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பிவிட்டதால், கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் மருத்துவ ஆக்ஸிஜனின் தேவை மிக அதிகமாக இருக்கிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் புதிய நோயாளிகளை சேர்க்க மறுக்கின்றனர். இதனால் பலரும் உயிருக்கு போராடி வருகின்றனர்.
தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக் குறையின் காரணமாக அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புதிய நோயாளிகள் யாரையும் அனுமதிக்க மறுப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சரோஜ் மருத்துவமனையும் புதிய நோயாளிகளை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளது. எங்களிடம் போதிய ஆக்சிஜன் இல்லாததால், மருத்துவமனையில் நோயாளிகளை அனுமதிப்பதை நிறுத்திவிட்டோம். சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளையும் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றி வருகிறோம் என்று அந்த மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
இதனிடையே 480 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மத்திய அரசு தராவிட்டால், டெல்லியில் நிலைமை முற்றிலும் சீரழிந்துவிடும். ஆக்சிஜன் வழங்குவதற்கான உறுதியை மத்திய அரசு எழுத்துப் பூர்வமாக தரவேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications