கோவாக்சின் மருந்து மனிதர்களுக்கு சோதனை.. உங்களுக்கு விருப்பமா.. டெல்லி எய்ம்ஸ் முக்கிய அறிவிப்பு
டெல்லி: கோவாக்சின் தடுப்பு மருந்து சோதனைக்கு இன்று முதல் தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது.
Recommended Video

கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன. பல்வேறு நாடுகளில் உள்ள மருந்து நிறுவனங்கள் நடத்தி வரும் சோதனைகள் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளன.
இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, சீனா,ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வறு நாடுகள் பல சோதனைகளுக்கு பின்னர் இறுதியாக மனிதர்களுக்கு கொடுத்து சோதித்து வருகின்றன.

மனிதர்களுக்கு சோதனை
அந்த வகையில் இந்தியாவும் கோவாக்சின் மருந்தை ஆய்வக சோதனைகள், விலங்குகள் மீதான சோதனைகள் முடிந்த நிலையில் மனிதர்கள் மீது சோதிக்க தொடங்க உள்ளது. இந்த சோதனையில் வெற்றி கிடைத்த பின்னரே நோயாளிகளுக்கு வழங்கப்படும்.

பாரத்பயோடெக் நிறுவனம்
புனேவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத்பயோடெக் மருந்நு நிறுவனம் தான் கொரோனாவிற்கான தடுப்பு மருந்தான கோவாக்சின் என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது. பலகட்ட ஆராய்ச்சிகளை நடத்தி முடித்துள்ளது. மனிதனுக்கு செலுத்தி ஆய்வு செய்யும் சோதனை தொடங்கப்பட உள்ளது. இந்தியாவில் கோவாக்சின் மருந்து இரண்டு கட்டமாக மனிதர்களுக்கு செலுத்தி சோதிக்கப்பட உள்ளது. இந்த மருந்து இந்தியாவில் டெல்லி, ஹைதரபாத், சென்னை உள்பட 12 நகரங்களில் சோதிக்கப்பட உள்ளது.

இன்று முதல் பதிவு
இந்நிலையில் கோவாக்சின் தடுப்பு மருந்து சோதனைக்கு இன்று முதல் தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுவார்கள் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது.
கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நபர்கள் முழு உடல் தகுதியுடன், எந்த வித நோயும் இல்லாமல் இருத்தல் வேண்டும். அவர்கள் வயது 18 வயது முதல் 55 வயது வரை இருக்க வேண்டும் என்றும் அந்த நபர்களுக்கான பதிவு இன்று முதல் தொடங்கும் என்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் சஞ்செய் ராய் தெரிவித்துள்ளார்.

தொலைப்பேசி எண் அறிவிப்பு
சோதனைக்கு விருப்பம் தெரிவிக்கும் நபர்கள் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு மூலம் பதிவு செய்துகொள்ளலாம். அல்லது 7428847499 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் மருத்துவர் சஞ்செய் ராய் தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications