குஜராத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்.. நடந்தது என்ன? இதுவரை வெளிவந்த தகவல்கள்
அகமதாபாத்: குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இருந்து இங்கிலாந்தின் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற விமானம் டேக் ஆப் ஆன சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியுள்ளது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மே டே கால் அழைப்பு வந்துள்ளது. ஆனால், பதிலுக்கு தொடர்பு கொள்ள முயற்சிக்கும் முன்பாக விபத்து நேரிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. விமானம் 825 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியுள்ளது.
குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இருந்து இங்கிலாந்தின் லண்டனுக்கு புறப்பட்டு சென்ற விமானம் டேக் ஆப் ஆன சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியுள்ளது. விமானத்தில் பயணம் செய்த 242 பயணிகளின் கதி என்ன என்று தெரியாத நிலையில், மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த விபத்து தொடர்பாக இதுவரை தெரியவந்த தகவல்கள் வருமாறு:-
* விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து கரும்புகை கிளம்பி வருகிறது. இதனால், பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டு இருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
* விமானம் 1.37 மணிக்கு டேக் ஆப் ஆனது. டேக் ஆன சில நிமிடங்களில் மே டே கால் என சொல்லப்படும் அவசர அழைப்பு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும், அதற்குள் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.
* 825 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது.
* விமான விபத்தையடுத்து, முக்கியமான விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
* லண்டன் காட்விக் நகரத்திற்கு அகமதாபாத்தில் இருந்து Flight AI171 என்ற விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம்தான் விபத்தில் சிக்கியுள்ளது.
அனுபவம் வாய்ந்த விமானி
* சுவித் சபர்வா என்ற விமானி இந்த விமானத்தை இயக்கியுள்ளார். விமானி நீண்ட மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் கொண்டவர். அனுபவம் வாய்ந்த கேப்டன் தான் இவர்.
* விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய விமான கேப்டன் இதுவரை 8200 மணி நேரம் விமானத்தை இயக்கியுள்ளார்.
* விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் 171, அகமதாபாத் விமான நிலையம் ரன்வே 23-ல் இருந்து புறப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் சுற்று வட்டார பகுதியை தாண்டி சென்ற சில நிமிடங்களில் மேகானி நகர் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியின் விடுதி கட்டிடத்தில் விழுந்து நொறுங்கியுள்ளது.
* விபத்தில் சிக்கிய விமானத்தில், 230 பயணிகள், 12 சிப்பந்திகள் என மொத்தம் 242 பேர் பயணம் செய்தனர். இதில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்கள், ஒருவர் கனடா நாட்டை சேர்ந்தவர், 7 பேர் போர்ச்சுகீசிய நாட்டை சேர்ந்தவர்கள் பயணம் செய்துள்ளனர்.
சாப்பிட்டுக்கொண்டிருந்த போது
* இதுவரை இந்த விமான விபத்தில் 133 பேரின் உடல்கள் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
* இந்த விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் பயணித்ததாக கூறப்படுகிறது. அவரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. எனினும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
* விமானம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் இருந்த விடுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது. இதில் மருத்துவ விடுதி கட்டிடமும் தீ பிடித்து விபத்துக்குள்ளானது. விடுதியில் சாப்பிட்டுக்கொண்டவர்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். 5 பேர் வரை பலியானதாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
* விமான விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் அதிர்ச்சி அடைந்ததாக கூறிய பிரதமர் மோடி, உடனடியாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோரை அகமதாபாத்திற்கு விரையுமாறு உத்தரவிட்டுள்ளார். சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
ராம் மோகன் நாயுடு
* விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு இந்த விபத்து குறித்து தனது அதிர்ச்சியையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அகமதாபாத்தில் விமான விபத்து ஏற்பட்ட செய்தியால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். மீட்புக் குழுக்கள் விரைந்து செயல்பட்டு, மருத்துவ உதவி மற்றும் நிவாரண உதவிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமானத்தில் இருந்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை பற்றியே எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன," என்று தெரிவித்துள்ளார்.
133 பேர் உடல் கருகி பலி?
விமானிகள் இரண்டு பேர், ஊழியர்கள் 10 பேர், பயணிகள் 230 பேர் என மொத்தமாக 242 பேர் பயணம் செய்த நிலையில் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. கைக்குழந்தைகளும் இந்த விமானத்தில் பயணம் செய்துள்ளனர். இந்தியாவை சேர்ந்த 169 பேர், இங்கிலாந்தை சேர்ந்த 53 பேர், கனடாவை சேர்ந்த ஒருவர் இந்த விமான விபத்தில் பயணம் செய்துள்ளனர். தற்போது இந்த விமான விபத்தில் 133 பேர் உடல் கருகி பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உதவி எண்கள்
தொடர்ந்து அப்பகுதியில் மீட்பு பணி நடந்து வருகிறது. 133 பேர் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் விழுந்ததால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்று அச்சம் எழுந்துள்ளது. அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 011-24610843, 96503 91589 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications