கொத்து கொத்தாக லீவு போட்ட ஏர் இந்தியா விமான பணியாளர்கள்! 25 பேர் பணிநீக்கம் செய்து உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் திடீர் போராட்டம் அறிவித்துள்ளதை அடுத்து 25 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டனர்.

ஊழியர்களை நடத்துவதில் சமத்துவம் இல்லை, நிர்வாகம் தவறாக நிர்வகிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகளை முன் வைத்து கடந்த மாதம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர் சங்கத்தினர் குற்றச்சாட்டை எழுப்பியிருந்தனர்.

Air India Express workers 25 were dismissed

இதையடுத்து கடந்த புதன்கிழமை இரவு முதல் விமான நிறுவன ஊழியர்கள் பலர் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதாக கூறி மெடிக்கல் லீவ் எடுத்து பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது.

இதனால் உள்ளூர், வெளிநாட்டு விமானங்கள் பல தாமதமாக புறப்பட்டது. 70-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெங்களூர், டெல்லி, கோழிக்கோடு, திருவனந்தபுரம், கொச்சி, கண்ணூர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விமான நிலையங்களில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் விமான நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: நேற்று முன் தினம் இரவு முதல் ஊழியர்கள் பணிக்கு வராமல் விடுப்பு எடுத்துள்ளதால் கடைசி நேரத்தில் விமான சேவை ரத்து செய்யப்படும் நிலை உள்ளது. எங்கள் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசவுகரியத்தை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பயணிகளிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகிறோம். சேவை ரத்து செய்யப்பட்டுள்ள பயணிகளின் முழு பணமும் திருப்பி அளிக்கப்படும் அல்லது வேறு நாளில் சேவை மாற்றியமைத்துக் கொள்ளலாம். எங்கள் விமானத்தில் பயணம் மேற்கொள்ளவுள்ள பயணிகள் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை வீட்டில் இருந்து கிளம்பும் முன்பு உறுதி செய்து கொள்ளுங்கள் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஊழியர்களின் இந்த திடீர் விடுப்புக்கான காரணத்தை கண்டறிந்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது என விமான நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் 300 க்கும் மேற்பட்டோர் விடுப்பில் சென்றுவிட்டதால் ஏர் இந்தியா விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன ஊழியர்கள் போராட்டத்தால் கொல்கத்தா, திருவனந்தபுரம், சிங்கப்பூர் உள்பட 8 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே முன்னறிவிப்பின்றி விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். 78 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவன கேபின் குழு ஊழியர்கள், 2ஆவது நாளாக இன்றும் திடீர் விடுப்பு எடுக்கும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து 25 ஊழியர்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.

தொடர் நஷ்டம், ஊழியர்களின் ஒத்துழைப்பு இல்லாமை உள்ளிட்ட காரணங்களால் டாடா நிறுவனத்திற்கு ஏர் இந்தியா நிறுவனத்தை மத்திய அரசு விற்பனை செய்தது. இதைத் தொடர்ந்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு விமான சேவைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+