Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியாவில் மீண்டும் ஒரு விமான விபத்து.. தரையிறங்கியதும் பற்றி எரிந்த ஏர் இந்தியா விமானம்.. அலறிய பயணிகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் தரையிறங்கிய சில நிமிடங்களில் விமானத்திற்குள் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டனர். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஏர் இந்தியா விமான நிறுவனம், விமானிகள், பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர் என தெரிவித்துள்ளது.

ஹாங்காங்கிலிருந்து டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று மதியம் ஏர் இந்தியா ஏஐ-315 விமானம் வந்தது. விமானம் லேண்டிங் ஆன சில நிமிடங்களில் விமானத்தில் தீப்பிடித்துள்ளது. பயணிகள் இறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றத்தில் அலறிய பயணிகள் அவசர அவசரமாக தரையிறங்கினர்.

air-india-flight-from-hong-kong-faces-apu-fire-upon-landing-in-delhi

விமானத்தில் தீப்பிடித்ததால் பரபரப்பு

விமானத்தின் துணை மின் உற்பத்திப் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. தீ பிடித்தது தெரியவந்ததும், துணை மின் உற்பத்திப் பிரிவு தானாகவே செயல்பாட்டை நிறுத்தியது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பயணிகளும், விமானிகள், ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேறியதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரட்டை ஜெட் ஏர்பஸ் ஏ321 விமானத்தில் சில சேதங்கள் ஏற்பட்டுள்ளன என்றும், விசாரணை முடியும் வரை இந்த விமானம் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், சம்பவம் குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது. விமானம் லேண்டிங் ஆன சில நிமிடங்களில் விமானத்தில் தீப்பிடித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அடுத்தடுத்த விமான விபத்துகள்

சமீப காலமாக அடுத்தடுத்து விமான விபத்துகள் நடைபெறுவது பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. குறிப்பாக கடந்த மாதம் 12 ஆம் தேதி குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானம் கல்லூரி விடுதி மீது விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் தப்பினார். ஏனைய அனைத்து பயணிகள் மற்றும் கீழே இருந்தவர்கள் என 260 பேர் பலியாகினர்.

இந்த விபத்து உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தொடர்ச்சியாக விமானத்தில் தொழில் நுட்ப கோளாறுகளும் சிறிய அளவிலான விபத்தில் சிக்குவதும் பயணிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. டெல்லியில் இருந்து மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ரன்வேயில் ஓடிக்கொண்டு இருந்தபோது தொழில் நுட்ப கோளாறு கண்டறியப்பட்டு டேக் ஆப் ரத்து செய்யப்பட்டது.

ஓடுபாதையில் இருந்து விலகிய விமானம்

155 கிலோ மீட்டர் வேகத்தில் விமானம் ரன்வேயில் சென்று கொண்டிருந்த போது டேக் ஆப் ரத்து செய்யப்பட்டது. உரிய நேரத்தில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதேபோல, மும்பையில் இருந்து கொச்சிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம், ஓடுபாதையில் விலகி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காலை 10.30 மணியளவில் கொச்சியில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்தது. அந்த நேரத்தில் விமான நிலைய பகுதியில் மழை பெய்து கொண்டு இருந்தது. விமானம் தரையிறங்கிய போது ஓடுபாதையில் இருந்து விலகி ஓடி நின்றது. இந்த விபத்து காரணமாக விமானத்தில் 3 சக்கரங்களின் டயர்கள் வெடித்தன. விமானத்தின் என்ஜின் பகுதி சேதமடைந்தது.

என்ஜின் பகுதிக்குள் சகதியும் சென்றது. அதே நேரத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இந்த சம்பவம் காரணமாக சம்பந்தப்பட்ட ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டது. மாற்று ஓடுபாதையில் விமானங்கள் இயக்கப்பட்டன.

பள்ளிக்கூடம் மீது விழுந்து நொறுங்கிய விமானம்

அண்டை நாடான வங்கதேசத்திலும் நேற்று முன் தினம் ராணுவத்திற்கு சொந்தமான விமானம் விபத்தில் சிக்கியது. குர்மிடோலா என்ற இடத்தில் பயிற்சியில் ஈடுபட்டு இருந்த விமானம், விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. தலைநகர் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள 2 மாடிகள் கொண்ட பள்ளிக்கூடம் மீது அந்த விமானம் விழுந்து நொறுங்கியது.

விமான விபத்தில் சிக்கி விமானி மற்றும் மாணவர்கள் உள்பட 20 பேர் உடல் கருகி பலியாகினர். படுகாயம் அடைந்த 160-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்குள்ளான எப்-7 பி.ஜி.ஐ. என்ற போர் விமானம் சீனாவின் தயாரிப்பாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+