தோழியை சந்தோஷப்படுத்தனுமாம்.. விமானத்தின் காக்பிட்டுக்கு அழைத்து விமானி செய்த செயல்.. அடுத்த ட்விஸ்ட்!
டெல்லி: துபாய்-டெல்லி ஏர் இந்தியா விமானத்தின் விமானி ஒருவர் தனது தோழியை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக அவரை காக்பிட்டுக்கு அழைத்து சென்று செய்த செயல் தற்போது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் தற்போது அந்த விமானி சிக்கலில் சிக்கி உள்ளார். உண்மையில் விமானி என்ன செய்தார்? அவர் ஏன் சிக்கலில் சிக்கியுள்ளார்? என்பது பற்றிய முழுவிபரம் வருமாறு:
இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு இடையேயும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும் ‛ஏர் இந்தியா' விமான சேவைகளை வழங்கி வருகிறது. தினமும் ஏராளமான பயணிகள் ஏர் இந்தியா விமானத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

அதாவது விமானி ஒருவர் தனது தோழியை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்பதற்காக விமானத்தின் காக்பிட்டுக்கு அழைத்து சென்ற சம்பவம் தான் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது எங்கு நடந்தது? எந்த விமானத்தில் நடந்தது? தோழியை எதற்காக காக்பிட்டுக்கு விமானி அழைத்து சென்றார்? என்பது பற்றிய முழுவிபரம் வருமாறு:
விமானங்களின் காக்பிட் பகுதி என்பது சாதாரண மக்களுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக உள்ளது. காக்பிட் பகுதி என்பது விமானிகளுக்கானது. இங்கிருந்து தான் விமானிகள் விமானங்களை இயக்கி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் யாருக்கும் அதன் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.
இந்நிலையில் தான் துபாய்-டெல்லி இடையே ஏர் இந்தியா விமானங்கள் இயங்கி வருகின்றன. வழக்கம்போல் துபாயில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அப்போது விமானி ஒருவர் தனது தோழியை காக்பிட் பகுதிக்குள் அனுமதித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தோழியை மகிழ்ச்சிப்படுத்த விரும்பிய விமானி அவரை காக்பிட் பகுதியில் அனுமதித்துள்ளார்.
மேலும் காக்பிட்டில் உள்ள இருக்கையில் அமர வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் அவருக்கு தேவையான உணவுகளையும், மதுபானத்தையும் வினியோகம் செய்ய விமானி கூறியுள்ளார். ஆனால் அந்த விமான பணியாளர் மறுத்துள்ளார். காக்பிட்டில் அவருக்கு உணவு, மதுபானம் வழங்க முடியாது என தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி மாதம் 27 ம் தேதி நடந்துள்ளது. இதற்கிடையே தான் விமான கேபின் குழு உறுப்பினர் ஒருவர் சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். காக்பிட் பகுதியில் பொதுமக்களை அனுமதிப்பது என்பது பாதுகாப்பு தொடர்பான விதிமீறலாகும். ஆனால் விமானி ஒருவர் தனது தோழியை அங்கு அனுமதித்ததாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சிவில் டிஜிசிஏ எனும் விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விசாரணை தொடங்கி உள்ளது.
இதுபற்றி ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‛‛ விமான பயணிகளின் பாதுகாப்பு அம்சங்களில் நாங்கள் எந்த சமரசத்தையும் கொண்டிருப்பது இல்லை. இந்த விஷயத்தில் விதிகள்படி நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரம் DGCA க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் நாங்கள் கட்டுப்பாட்டாளரின் விசாரணைக்கும் ஒத்துழைக்கிறோம்" என்று விமானச் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications