155 கி.மீ வேகம்.. டக்கென டேக் ஆப் ஆவதை கைவிட்ட ஏர் இந்தியா விமானி! டெல்லி ஏர்போர்ட்டில் பரபர சம்பவம்
டெல்லி: டெல்லியில் இருந்து கொல்கத்தாவிற்கு புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தில் கடைசி நேரத்தில் தொழில் நுட்ப கோளாறு கண்டறியப்பட்டது. இதையடுத்து விமானம் டேக் ஆப் ஆவது ரத்து செய்யப்பட்டுள்ளது. ரன்வேயில் 155 கிலோ மீட்டர் வேகத்தில் விமானம் சென்று கொண்டிருந்த போது திடீரென டெக்னிக்கல் கோளாறு தெரியவந்ததால் பிரேக் அடித்த விமானி, டேக் ஆப் ஆவதை ரத்து செய்துள்ளார்.
டெல்லியில் இருந்து மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான Flight AI2403 என்ற விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம், டெல்லியில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட இருந்தது. பயணிகள் அனைவரும் விமானத்தில் ஏறி அமர்ந்த நிலையில், புறப்படுவதற்கு தேவையான அனைத்து நடைமுறைகளும் முடிந்த பிறகு விமானம் ரன்வேயில் ஓட ரெடியானது.

155 கிலோ மீட்டர் வேகத்தில்
ரன்வேயில் விமானம் புறப்பட்டு டேக் ஆப் ஆக இருந்த சமயத்தில், விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். அதாவது, விமானம் மணிக்கு 155 கிலோ மீட்டர் வேகத்தில் ரன்வேயில் ஓடிக்கொண்டு இருந்த போது விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டறிந்தார். உடனடியாக நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விமானம் டேக் ஆப் ஆவதை விமானி கைவிட்டார்.
விமானத்தில் இருந்து அனைத்து பயணிகளும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். விமானம் டேக் ஆப் ஆக இருந்த சமயத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:- "விமானத்தில் இருந்து அனைத்து பயணிகளும் பத்திரமாக இறக்கப்பட்டனர்.
160 பயணிகள் அவதி
விமான நிலையத்தில் இருந்த ஊழியர்கள் தேவையான உதவிகளை செய்தனர்.
பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். பயணிகள் நலன் மற்றும் பாதுகாப்பில் ஏர் இந்தியா அதிக கவனம் செலுத்துகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து விமானம் புறப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டதால், விமானத்தில் இருந்த 160 பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
பயணிகள் அனைவரும் டெல்லியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என ஏர் இந்தியா விமான நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மும்பை விமான சம்பவம்
முன்னதாக மும்பையில் இருந்து கொச்சிக்கு சென்ற ஏர் இந்தியா விமானம், ஓடுபாதையில் விலகி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்த விவரம் வருமாறு:- மும்பையில் நேற்று பலத்த மழை பெய்த நிலையில் காலை 10.30 மணியளவில் கொச்சியில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்தது. அந்த நேரத்தில் விமான நிலைய பகுதியில் மழை பெய்து கொண்டு இருந்தது. விமானம் தரையிறங்கிய போது ஓடுபாதையில் இருந்து விலகி ஓடி நின்றது. இந்த விபத்து காரணமாக விமானத்தில் 3 சக்கரங்களின் டயர்கள் வெடித்தன.
விமானத்தின் என்ஜின் பகுதி சேதமடைந்தது. என்ஜின் பகுதிக்குள் சகதியும் சென்றது. அதே நேரத்தில் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். இந்த சம்பவம் காரணமாக சம்பந்தப்பட்ட ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டது. மாற்று ஓடுபாதையில் விமானங்கள் இயக்கப்பட்டன.
ஏர் இந்தியா விளக்கம்
இதுகுறித்து ஏர் இந்தியா செய்தி தொடர்பாளா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- "கொச்சியில் இருந்து மும்பைக்கு இயக்கப்பட்ட விமானம் தரையிறங்கிய போது பலத்த மழை காரணமாக ஓடுபாதையில் இருந்து விலகியது. விமானம் பாதுகாப்பாக கேட் வரை இழுத்து செல்லப்பட்டது. பயணிகள் மற்றும் பணியாளர்கள் விமானத்தில் இருந்து பத்திரமாக இறக்கப்பட்டனர்.
விமானம் சோதனைக்காக நிறுத்தப்பட்டுள்ளது. பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானங்களில் சமீப காலமாக அடிக்கடி தொழில் நுட்ப கோளாறு ஏற்படும் சம்பவங்கள் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications