சிக்கலில் ஏர் இந்தியா.. வாஷிங்டனுக்கு விமானத்தை இயக்கவில்லையாம்! காரணத்தை பாருங்க
டெல்லி: ஏர் இந்தியா விமானங்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகின்றன. இந்நிலையில், டெல்லியிலிருந்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு இதற்கு முன்னர் விமானங்களை இந்நிறுவனம் இயக்கி வந்த நிலையில், செப்டம்பர் மாதம் முதல் இந்த சேவையை ரத்து செய்கிறோம் என்று அறிவித்திருக்கிறது.
ஏர் இந்தியா நிறுவனம் செப்டம்பர் மாதம் முதல் டெல்லி மற்றும் வாஷிங்டன் டி.சி. இடையேயான தனது விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. போயிங் ரக விமானங்களின் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக விமானப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதே இந்த முடிவுக்கு முக்கியக் காரணம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் இரண்டு நிறுவனங்களின் விமானங்கள் இருக்கின்றன. ஒன்று ஏர்பஸ், இன்னொன்று போயிங். ஏர் இந்தியா விமான போக்குவரத்து நிறுவனம் போயிங் விமானங்களைதான் பயன்படுத்தி வருகிறது. போயிங் விமானங்களின் பழுதுபார்ப்பு மற்றும் பாகங்கள் புதுப்பித்தல் பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக விமானங்களின் பயன்பாடு குறைந்துள்ளது. 2026 ஆம் ஆண்டு இறுதி வரை விமானங்கள் விமானங்கள் பற்றாக்குறை இருக்கும் என ஏர் இந்தியா மதிப்பிட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமானங்களுக்கு மூடியுள்ளதும் ஏர் இந்தியாவின் சர்வதேச வழித்தடங்களை பாதித்துள்ளது. இந்த இரு காரணங்களாலும் டெல்லி-வாஷிங்டன் சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்திய விமான போக்குவரத்து நிறுவனங்களில் ஏர் இந்தியா மட்டுமே வாஷிங்டன்னுக்கு விமான சேவையை வழங்கி வந்தது. இப்போது இதுவும் தனது சேவையை நிறுத்தியிருக்கிறது. எனவே டெல்லியிலிருந்து வாஷிங்டன் செல்ல விரும்பும் பயணிகள் யுனைடெட் ஏர்லைன்ஸ், ஏர் பிரான்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ், லுஃப்தான்சா போன்ற விமான நிறுவனங்களை நாட தொடங்கியுள்ளனர்.
ஏர் இந்தியா, தனது போயிங் 787-8 ரக விமானங்களில் 26 விமானங்களில் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பழுதுபார்ப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது. இந்த பணிகள் 2026 ஆம் ஆண்டு இறுதி வரை விமானங்களின் பயன்பாட்டை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"இந்த போக்குவரத்து ரத்து, முதன்மையாக ஏர் இந்தியாவின் விமான எண்ணிக்கையில் திட்டமிடப்பட்ட பற்றாக்குறையால் ஏற்பட்டது" என்று ஏர் இந்தியா வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. "இது, பாகிஸ்தான் வான்வெளி தொடர்ந்து மூடப்பட்டிருப்பதுடன், விமான நிறுவனத்தின் நீண்ட தூர சேவைகளை பாதிக்கிறது" என்றும் கூறியிருந்தது.
பாகிஸ்தானின் வான்வெளி தடை காரணமாக ஏர் இந்தியாவுக்கு 12 மாதங்களில் 600 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது என்பது கவனிக்கத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications