மூச்சு திணறும் டெல்லி.. தீபாவளிக்கு பின் மோசமாகும் நிலைமை! முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்
டெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் காற்று மாசு மிகவும் மோசமாக இருப்பதால் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். தீபாவளிக்கு பின்னர் காற்று மாசு மேலும் பலமடங்கு அதிகரிக்கும் என்பதால் அதனை தடுக்க டெல்லி அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கி ஜனவரி மாதம் வரை வழக்கமாக டெல்லியில் காற்று மாசு அதிகரிக்கும். அதேபோல இந்த முறையும் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது. பொதுவாக காற்றில் மாசு 201-300 வரை இருந்தால் அது மோசமான, சுவாசிக்க ஏற்றதக்கதாக அல்லாத காற்றாக குறிப்பிடப்படுகிறது. ஆனால் டெல்லியில் தற்போது 400ஐ தாண்டி காற்று மாசு பதிவாகியுள்ளது. இதனால் மருத்துவமனையை நோக்கி படையெடுப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த அளவில் காற்றின் பாதுகாப்பான தரத்தை விட 7 முதல் 8 மடங்கு காற்று மாசு அதிகரித்திருக்கிறது. நிலைமையை சமாளிக்க லோதி சாலை பகுதியில் டெல்லி மாநகராட்சி சார்பில் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல மாசு மேலும் அதிகரிக்காமல் இருக்க BS3 மற்றும் BS4 வாகனங்கள் டெல்லிக்குள் இயக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி எனப்படும் கேஸ் மூலமாக இயங்கும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது.
இருப்பினும் விதிகளை மீறி ஹரியானாவிலிருந்து டெல்லிக்குள் டீசல் என்ஜின் லாரிகள் நுழைய முயன்றுள்ளன. இதை போக்குவரத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர். அதேபோல சாலையில் செல்லும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையை 50% குறைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில், பதிவெண் அடிப்படையில் ஒற்றைப்படை, இரட்டைப்படை என வாகனங்கள் இயங்க புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், தொடக்கப் பள்ளி மாணவர்கள் தொடங்கி 11ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் வரும் 11ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொது தேர்வு காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் வழக்கம் போல செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் குறைவாக இருப்பதாலும், மழை இல்லாததாலும் டெல்லியில் உள்ள காற்று மாசு தொடர்ந்து அதே நிலையில் நீடித்து வருகிறது.
டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிக்கப்படுவதால் காற்று மாசு அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். காற்று மாசு காரணமாக சுமார் 2 கோடி மக்கள் கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல 50% பேரை வீட்டிலிருந்தே பணியாற்ற வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் இதற்கடுத்த நாட்களில் காற்றின் தரம் மோசமாக இருக்கும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications