வேண்டாம்.. அங்கேயே நில்லுங்க.. கையை காட்டிய பிடிஆர்.. உதயநிதி அப்போ கொடுத்த ரியாக்சன்.. தங்கமழை!
மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இன்று சுவாரசியமான சம்பவம் ஒன்று நடைபெற்றது.
மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இதுவரை 4 சுற்றுகள் முடிந்து உள்ளன. ஒரு பார்வையாளர் உட்பட அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தற்போது வரை 15 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இதுவரை 13 காளைகளை அடக்கிய அபி சித்தர் என்ற இளைஞர் இந்த போட்டியில் முதலிடம் பிடித்து உள்ளார். 9 காளைகளை அடக்கிய அஜய் இரண்டாம் இடம் பிடித்து உள்ளார். 7 காளைகளை அடக்கிய கோபாலகிருஷ்ணன் 3ம் இடத்தில் உள்ளார்.

உதயநிதி
விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த போட்டிகளை தொடங்கி வைத்து உள்ளார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பச்சை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதையடுத்து வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய்ந்த நிலையில் அதனை உற்சாகமாக வீரர்கள் பிடித்தது உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. காலை 7.30 மணிக்கு வாசிவாசல் திறக்கப்பட்ட நிலையில் ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த முறை அலங்காநல்லூரில் 1000 காளைகளும், 350 வீரர்களும் ஆட உள்ளனர். முதல் பாதி ஆட்டம் முடிய உள்ள நிலையில் கிட்டத்தட்ட500 காளைகள் வரை இதுவரை களமிறக்கப்பட்டு உள்ளன.

சின்ன சச்சரவு
இந்த போட்டியில் நான்காம் சுற்று ஆட்டம் முடியும் நேரத்தில் சின்ன சச்சரவு ஏற்பட்டது. காளைகள் வரிசையாக வந்த நேரத்தில் இளைஞர் ஒருவர் காளையை பிடித்தார். காளையை பிடித்தபடி சில மீட்டர்கள் நடந்தார். இதனால் காளை பிடிபட்டதாக நினைத்துக்கொண்டு அவர் வேகமாக பரிசு வாங்க சென்றார். ஆனால் அவருக்கு பரிசு கொடுக்கப்படவில்லை. காளை வெற்றிபெற்றுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடுப்பான அந்த இளைஞர் பரிசு கேட்டு இங்கும் அங்கும் நடந்தார். விழா கமிட்டியினரிடம் வாக்கு வாதம் செய்தார்.

பயந்த மாடு
அதன்பின் அந்த வீரரை விழா கமிட்டியினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்வில் நடுவில் திடீரென மாடு ஒன்று மிரண்டு போய் நின்றது. வெற்றிபெற்ற அந்த மாடு கூட்டத்தை பார்த்து வெளியே செல்லாமல் மிரண்டு போய் நடுவில் நின்றது. பின்னர் மெதுவாக வெளியே சென்ற மாடு மிரண்டு போய் மீண்டும் போட்டி நடக்கும் மைய பகுதிக்கு வந்தது. இதை வீரர்கள் பார்க்காமல் அடுத்த மாட்டிற்காக காத்து இருந்தனர். சிலர் மைதானத்தில் நடுவில் இருந்தனர்.

நிற்க சொன்ன பிடிஆர்
இந்த நிலையில்தான் அமைச்சர் பிடிஆர் இதை பார்த்துவிட்டு உடனே வீரர்களை நகர்ந்து நிற்கும்படி கூறினார். அதோடு நடுவில் ஓடிய வீரர்களை பார்த்து அங்கேயே நில்லுங்கள் என்று கூறினார். இதை கவனித்த அமைச்சர் அன்பில் மகேசும் போகாதீங்கப்பா.. அங்கேயே நில்லுப்பா என்று கையை காட்டி வீரர்களிடம் சொன்னார். இதை உதயநிதி ஸ்டாலின் கவனித்துவிட்டு அங்கே திரும்பி பார்த்தார். ஏற்கனவே சென்ற மாடு திரும்பி வந்ததை இன்று ஆச்சர்யத்துடன் அவர் பார்த்துக்கொண்டு இருந்தார்.

தங்கமழை
இந்த போட்டியில் வெல்லும் நபர்களுக்கு கார், பைக், தங்க செயின், தங்க மோதிரம் என்று சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருவம் பொறித்த தங்க மோதிரமும் வழங்கப்படுகிறது. கிட்டத்தட்ட தங்கமழை பொழிகிறது என்று சொல்லும் அளவிற்கு இன்று வீரர்களுக்கும், மாடு ஓனர்களுக்கும் தங்கமாக வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications